3843.
|
சிற்றிடை
யுடன்மகிழ் சிறுகுடி மேவிய |
|
சுற்றிய
சடைமுடி யீரே
சுற்றிய சடைமுடி யீரும தொழுகழல்
உற்றவ ருறுபிணி யிலரே. 2 |
2.
பொ-ரை: குறுகிய இடையையுடைய உமாதேவியை
உடனாகக் கொண்டு மகிழ்ச்சியுடன் திருச்சிறுகுடி என்னும் திருத் தலத்தில் விரும்பி
வீற்றிருந்தருளுகின்ற சுற்றிய சடைமுடியுடைய
சிவபெருமானே! சுற்றிய சடைமுடியுடைய உம் திருவடிகளைத்
தொழுது வணங்குபவர்கட்குப் பிணி எதுவும் இல்லை.
கு-ரை:
சிறு இடை - சிற்றிடையை யுடைய உமாதேவியாரோடு
மகிழ்ந்து சிறுகுடியில் இருக்கும் சடைமுடியீரே. கழல் உற்றவர் -
திருவடியைப் பற்றுக்கோடாகக் கொண்டவர். உறு - தம்மைப்
பற்றியுற்ற. பிணி - பாசபந்தம், இலர்.
|