3847. |
செங்கயல்
புனலணி சிறுகுடி மேவிய |
|
மங்கையை யிடமுடை யீரே
மங்கையை
யிடமுடை யீருமை வாழ்த்துவார்
சங்கைய திலர்நலர் தவமே. 6
|
6.
பொ-ரை: செங்கயல்மீன் விளங்கும் நீர்வளமிக்க
திருச்சிறுகுடி என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற,
உமாதேவி யைத் தம் இடப்பாகமாகக் கொண்டு விளம்கும்
சிவபெருமானே! உமா தேவியைத் தம் இடப்பாகமாகக் கொண்டு
விளங்கும் உம்மை வாழ்த்தும் அடியவர்கள் அச்சம் இல்லாதவராவர்.
நலமிக்கவரும், தவப்பேறு உடைய வரும் ஆவர்.
கு-ரை:
செங்கயல் - ஒருவகைமீன். கயலையுடைய புனல்
சூழ்ந்த சிறுகுடி. நலர்தவம் - நல்தவர் என விகுதி பிரித்துக் கூறுக.
நல்ல தவத்தையுடையவர் ஆவர்.
|