3863. விண்பயில் பொழிலணி மிழலையு ளீசனைச்
  சண்பையுண் ஞானசம் பந்தன
சண்பையுண் ஞானசம் பந்தன தமிழிவை
ஒண்பொரு ளுணர்வது முணர்வே.            11

     11. பொ-ரை: ஆகாயத்தைத் தொடும்படி உயர்ந்தோங்கிய
சோலைகளையுடைய அழகிய திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளும் சிவபெருமானை, திருச்சண்பை என்னும்
திருத்தலத்தில் அவதரித்த ஞானசம்பந்தன் போற்றி அருளினான்.
அவ்வாறு, திருச்சண்பையில் அவதரித்த ஞானசம்பந்தன் அருளிய
இத்தமிழ்ப் பதிகத்தின் சீரிய கருத்தை உணர்ந்து ஓதுதல் நல்லுணர்வு
ஆகும்.

     கு-ரை: இவை - இவற்றின். ஒண்பொருள் - சீரிய கருத்தை.
உணர்வதும் உணர்வு - உணர்வதுவே உணர்வெனப்படுவது.
தேற்றேகாரம் பிரித்துக் கூட்டுக. உம்மை உயர்வு சிறப்பு.