3880. பொறிகிளர் பாம்பரை யார்த்தயலே
       புரிவோ டுமைபாடத்
ொறிகிள ரப்பெயர்ந் தெல்லியாடுந்
     திறமே தெரிந்துணர்வார்
எறிகிளர் வெண்டிரை வந்துபேரு
     மிராமேச் சுரமேய
மறிகிளர் மானம்ழுப் புல்குகையெம்
     மணாளர் செயுஞ்செயலே.              2

      2.பொ-ரை:வெண்ணிற அலைகள் துள்ளிவீசும் கடலுடைய
இராமேச்சுரத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, இள
மான்கன்றையும், மழுவைியும் ஏந்தியுள்ள சிவபெருமான்
புள்ளிகளையுடைய பாம்பை இடையில் கட்டிக் கொண்டு, பக்கத்திலே
சுருண்ட கூந்தலையுடைய உமாதேவி பாட, அதற்பேற்ப விரலால்
தேறித்துப் பண்ணும் யாழ் முதலியவற்றின் இசை ஒலிக்க, நள்ளிரவில்
நடனமாடும் செயலின் உண்மையைத் தெரிந்து உணர்பவர்
மெய்ஞ்ஞானிகளாவர்.

     கு-ரை:பொறி - புள்ளிகள், கிளர் - விளங்குகின்ற, பாம்பு,
அரை ஆர்த்து - இடுப்பிற் (கச்சையாகக்) கட்டி, அயலே -
பக்கத்திலே (நின்று) புரிவோடு உமைபாட அதற்கேற்ப, தெறி(கிளர) -
விரலால் தெறித்துப் பண்ணும் யாழ் முதலியவற்றின் இசை, கிளர -
ஒலிக்க, தெறி - தெறித்தல் என்னும் பொருள் தரலால் தொழிற்பெயர், (யாழ்) ஓசைக்கு அயினமை ஆகுபெயர். எல்லி - இரவு. எறி சிளர் -
வீசுதல். மிக்க வெண்திரை. கிளர் - துள்ளும். மறிமான் - மான்
கன்றும் முழு(வும்). புல்கும் - தங்கிய, கையையுடைய, உமை
மணவாளராகிய பெருமான் - எல்லியாடும் திறம் தெரிந்துணர்வார்.
இவை இராமேச்சுரம்மேய (உமை) மணவாளன் செய்யும் செயலே
என்பர் என, ஒரு சொல்லெச்சம் வருவித்து முடிவு கூறினும்
அமையும். சதி - (மனைவி) யென்ற பொருச் சொல் வட மொழியில்,
இறைவியைக் குறித்து வழங்கல்போலத் தமிழில் பிள்ளை (யார்) என்ற
பொதுச் சொல் (மூத்த பிள்ளை யார்). முருகக் கடவுளையும் குறித்து
வழங்கும். அதுபோல மணாளன் (பதி - வடசொல்) என்ற சொல்
இறைவனைக் குறித்தது. எமது ஆளுடைய பிள்ளையார் அருண்
மொழியின் திறம் அரிதின் உணரற்பாலது. மணாளன் என்பது
சிவபெருமானுக்கு ஒரு பெயர். அது "மஞ்சா போற்றி மணாளா
போற்றி" என்னும் போற்றித் திருவகவலாலும், "மணியே பொன்னே
மைந்தா மணாளா என்பார்கட் கணியான் ஆரூர் ஆதிரை நாளால்
அது வண்ணம்" என்னும் அப்பர் திருவாக்காலும் அறிக. (தி. 4. ப.21.
பா.2.)