3901. |
கொடியுடை
மும்மதி லூடுருவக் |
|
குனிவெஞ்
சிலைதாங்கி
இடிபட வெய்த வமரர்பிரா
னடியா ரிசைந்தேத்தத்
துடியிடை யாளையொர் பாகமாகத்
துதைந்தா ரிடம்போலும்
வடிவுடை மேதி வயல்படியும்
வலம்புர நன்னகரே. 1 |
1.
பொ-ரை: கொடிகளையுடைய மூன்று மதில்களையும்
ஊடுருவிச் செல்லுமாறு மேருமலையை வில்லாக வளைத்துத் தாங்கி,
பேரொலியுடன் அம்மதில் அழியும்படி அம்பெய்த தேவர்களின்
தலைவரான சிவபெருமான், அடியார்களெல்லாம் மனமொன்றிக்
கூடிப்போற்ற உடுக்கை போன்ற குறுகிய இடையுடைய உமா
தேவியைப்பிரிவில்லாமல் தம் உடம்பில் ஒரு பாகமாகக்
கொண்டு வீற்றிருந்தருளுகின்ற இடமாவது அழகிய எருமைகள்
வயலிலே படியும் திருவலம்புரம் என்னும் நன்னகராகும்.
கு-ரை:கொடி
- துவசம். இடிபடி - பேரொலி கிளம்ப (எய்த
பிரான்). துடி - உடுக்கை. துதைந்தார் - பிரிவிலா ஓருடம்பாகக்
கொண்டவர். போலும் உரையசை. "ஒப்பில்போலி" என்பர் தொல்காப்பியனார். வடிவுடைமேதி
- அழகுடைய எருமைகள். தலச்
சிறப்பால் அவைகளும் அழகுடையனவாகத் தோன்றும் என்ற
குறிப்பு. வலம்புர நன்னகர் துடியிடையாளை ஓர் பாகமாகத்
துதைந்தார்க்கிடம் என்க.
|