3904. |
ஊனம
ராக்கை யுடம்புதன்னை |
|
உணரிற்
பொருளன்று
தேனமர் கொன்றையி னானடிக்கே
சிறுகாலை யேத்துமினோ
ஆனம ரைந்துங்கொண் டாட்டுகந்த
வடிக ளிடம்போலும்
வானவர் நாடொறும் வந்திறைஞ்சும்
வலம்புர நன்னகரே. 4 |
4.
பொ-ரை: தசை முதலியவற்றால் கட்டப்பட்ட இவ்வுடம்பு
நிலையற்றது என்பதை உணர்ந்து, அதனைப் பேணுதலையே
பொருளாகக் கொள்ளாது,
தேன்மணம் கமழும் கொன்றைமாலை
அணிந்த சிவபெருமான் திருவடிகளையே சிறுவயது முதல் போற்றி
வழிபடுங்கள். பசுவிலிருந்து பெறப்படும் பஞ்சகவ்வியங்களால்
அபிடேகம் செய்யப் படுவதால் மகிழும் தலைவரான சிவபெருமான்
வீற்றிருந்தருளுகின்ற இடம் தேவர்கள் நாள்தோறும் வந்து
வழிபடுகின்ற திருவலம்புரம் என்னும் நன்னகராகும்.
கு-ரை:
ஊன் அமர் ஆக்கை உடம்பு - தசை முதலியவற்றை
வைத்துக் கட்டப்பட்டதாகிய உடம்பு. அமர் - அமர்த்தியெனப்
பகுதியே வினையெச்சப் பொருள் தந்தது, "அறுவேறு வகையின்
அஞ்சுவர மண்டி" (தி. 11 திருமுருகாற்றுப் படை. அடி. 58)
என்பதுபோல, "குடி பொன்றி" (குறள். 171) போல, பிறவினை
விகுதியும் தொக்கு நின்றது. சிறு காலை - இளவயதிலேயே உடம்பு
தன்னை யுணரில் அது பொருள் அன்று எனலறியலாகும். ஆதலின்
அதனைப் பேணுதலையே பொருளாகக் கொள்ளாது, அதனைக்
கொன்றையினான் அடிக்கே செலுத்திச் சிறுகாலை ஏத்துமின்
என்றவாறு. அவ்வாறு அவனை ஏத்துதற்கு உரியவிடம் அவன்
இருந்த வலம்புர நன்னகராம் என்க
|