3905. |
செற்றெறியுந்
திரையார் கலுழிச் |
|
செழுநீர்கிளர்
செஞ்சடைமேல்
அற்றறியா தனலாடு நட்ட
மணியார் தடங்கண்ணி
பெற்றறிவா ரெருதேற வல்ல
பெருமா னிடம்போலும்
வற்றறியாப் புனல்வாய்ப் புடைய
வலம்புர நன்னகரே. 5 |
5.
பொ-ரை: கரைகளில் மோதி வீசுகின்ற அலைகளையுடைய கங்கை நதியினை, ஒளி
பொருந்திய சிவந்த சடையின்மீது நீங்காது
தங்கவைத்த சிவபெருமான் நெருப்பைக் கையிலேந்தி நடனம்
செய்பவர். அழகு பொருந்திய அகன்ற கண்களையுடைய உமா
தேவியை ஒரு பாகமாகக் கொண்டவர். இடபத்தை வாகனமாக
ஏற்றவர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம், வற்றுதலை அறியாத நீர்பெருகும் வாய்ப்புடைய
திருவலம்புரம் என்னும் நன்னகர் ஆகும்.
கு-ரை:
செற்று - மோதி. எறியும் - வீசும். திரை ஆர் -
அலைகளையுடைய. கலுழி - (கங்கை) நதியின் செழுநீர் சடைமேல்.
அற்று அறியாது - நீங்காது தங்குவதாக. அனல் ஆடும் நட்டம் -
அனலின்கண் நின்று ஆடும் திருக்கூத்தின். பெற்று - (பெற்றி)
தன்மையை. அணி ஆர் - அழகு பொருந்திய. தடம் கண்ணி -
விசாலமான கண்களையுடைய உமா தேவியார். அறிவார் -
அறிவாராக. எருது வல்ல பெருமான்.
|