3908. |
தண்டணை
தோளிரு பத்தினொடுந் |
|
தலைபத்
துடையானை
ஒண்டணை மாதுமை தானடுங்க
வொருகால் விரலூன்றி
மிண்டது தீர்த்தருள் செய்யவல்ல
விகிர்தர்க் கிடம்போலும்
வண்டணை தன்னொடு வைகுபொழில்
வலம்புர நன்னகரே. 8 |
8.
பொ-ரை: தண்டு முதலிய ஆயுதங்களையுடைய இருபது
தோள்களும், பத்துத் தலைகளுமுடைய இராவணன் கயிலையைப்
பெயர்த்த போது, தம் உடம்போடு ஒன்றாக அணைந்துள்ள உமா
தேவி நடுங்க, சிவபெருமான் தம்காற் பெருவிரலை ஊன்றி
அவ்வரக்கனின் செருக்கை அடக்கி, பின் அவன் தன் தவறுணர்ந்து
துதித்தபோது, அருளும் செய்த மாறுபட்ட தன்மையுடையவர்.
அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் ஆண் வண்டுகள் தம் பெடை வண்டுகளைத் தழுவித் தங்கும்
சோலைகளை உடைய திருவலம்புரம்
என்னும் நன்னகர் ஆகும்.
கு-ரை:
தண்டு அணை - தண்டு முதலிய ஆயுதங்களைத்
தாங்கிய ஒண்டனை ஒன்று. அணை - தம் உடம்போடு ஒன்றாக
அணைந்த. மாது உமை - உமை அம்பிகை. ஒரு கால் விரல் - (கால்
ஒரு விரல்) காலின் ஒரு விரலால் ஊன்றி. மிண்டு - செருக்கை.
தீர்த்து - போக்கி. விகிர்தர் - வேறான தன்மையுடையவர். "பிறவாதே தோன்றினான்
காணாதே காண்பான் துறவாதே யாக்கை துறந்தான் -
முறைமையால் ஆழாதே யாழ்ந்தான் அகலாதகலியான் ஊழால்
உயராதே யோங்கினான்" (திருக்கயிலாய ஞான உலா. 3-5.) என்றதும்
காண்க. "வண்டு அணை தன்னொடு" வண்டு - ஆண் வண்டுகள்.
அணை தன்னொடு - தாங்கள் தழுவும் பெடைவண்டோடு. வைகு
- தங்கும் பொழில்.
|