3926. |
குன்றுகள்
போற்றிரை யுந்தியந்தண் |
|
மணியார்
தரமேதி
கன்றுடன் புல்கியா யம்மனைசூழ்
கவினார் கலிக்காமூர்
என்றுண ரூழியும் வாழுமெந்தை
பெருமா னடியேத்தி
நின்றுணர் வாரை நினையகில்லார்
நீசர் நமன்றமரே. 4 |
4.
பொ-ரை: குன்றுகளைப் போன்ற உயர்ந்த கடலலைகள்
அழகிய குளிர்ச்சி பொருந்திய முத்துக்களைத் தள்ளிக் கொண்டு
வந்து சேர்த்தலும், எருமைக் கூட்டங்கள் கன்றுகளோடு கூடித்
தத்தம் மனைகளைச் சென்று சேர்தலுமுடைய அழகு பொருந்திய
திருக்கலிக்காமூர் என்ற திருத்தலத்தில் ஊழிக்காலத்திலும்
வீற்றிருந்தருளும் எந்தையாகிய சிவபெருமானின் திருவடிகளைப்
போற்றி நின்று வழிபடுகின்ற அடியவர்களை நினையாதவர்கள்
கீழ்மக்கள் ஆவர். அவர்கள் இயமனது சுற்றத்தாரும் ஆவர்.
கு-ரை:
திரை உந்தி - அலைகளால் தள்ளப்பட்டு. அம் தண்
- அழகிய குளிர்ச்சி பொருந்திய. மணி - முத்துக்கள். மேதி ஆயம்
- எருமைக் கூட்டங்கள். கன்றுடன் - கன்றுகளோடு. புல்கி -
சேர்ந்து. மனைசூழ் கவின் ஆர் - மருதத்திணையின் அழகுமிக்க
கலிக்காமூர். திணை மயக்கம் என்று உணர்க. ஊழியும் - சூரியனை
முதன் முதலின் அறிந்த கற்பகாலத்திலும் வாழும் எந்தை பெருமான்.
உலகம் படைக்கப்பட்ட நாள் தொட்டுள்ள தலம் அது என்பதை
கூறியவாறு. ஏத்தி நின்று உணர்வாரை நினையாதவர் நீசர். இங்கே
கொடியவரென்னும் பொருட்டு.
|