3937. |
விடையொரு
பாலொரு பால்விரும்பு |
|
மெல்லியல்
புல்கியதோர்
சடையொரு பாலொடு பாலிடங்கொள்
தாழ்குழல் போற்றிசைப்ப
நடையொரு பாலொரு பால்சிலம்பு
நாளும் வலஞ்சுழிசேர்
அடையொரு பாலடை யாதசெய்யுஞ்
செய்கை யறியோமே. 4 |
4.
பொ-ரை: சிவபெருமானுக்கு இடபவாகனம் ஒரு பக்கம்,
விரும்பிச் சேர்ந்து மெல்லியல்புடைய கங்காதேவி ஒரு பக்கம்.
விரிந்து பரந்த சடை ஒரு பக்கம். தாழ்ந்த கூந்தலையுடைய
உமாதேவி ஒரு பக்கம். ஏறுபோல் பீடுநடை பயிலும் திருவடி
ஒருபக்கம். சிலம்பு அணிந்த திருவடி ஒருபக்கம். திருவலஞ்சுழி
என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் சிவபெருமானை நாளும்
வழிபடுக. முற்கூறியவை வேறெங்கும் சென்றடையாது சிவனையே
அடையும் சிறப்பைச் சிற்றறிவுடைய நாம் அறியோம்.
கு-ரை:
விடை ஒருபால் - இடபம் ஒருபுறம், ஒருபால் ... ...
மெல்லியல் - ஒருபுறம் அம்பிகை. மெல்லியல் புல்கியதோர் சடை -
கங்காதேவி தங்கியதாகிய சடை. ஒருபால் (மெல்லியல் என்ற
தொடரை மீளவும் கூட்டிப்
பொருள் கொள்க. பாதமலர்
சூடுகின்றிலை சூட்டுகின்றதுமிலை என்னும் திருவாசகத்திற்போல
இடம் ஒருபால் கொள் குழல் என்று கூட்டி இடப்பக்கமாகிய ஒரு
பால் பொருந்திய குழல் என்க. நடை ஒருபால் - ஏறுபோற் பீடுநடை
நடக்கும் திருவடி ஒருபால். நடை - காரிய ஆகுபெயர். சிலம்பு
ஒருபால் - சிலம்பு அணிந்த திருவடி ஒருபால். சிலம்பு - தானியாகு
பெயர். ஒரு பால் - வேறு ஓரிடத்தும். அடையாத - இல்லாததாகிய.
அடை(வு) -முறைமையையும். (அடை - விகுதிபுணர்ந்து கெட்ட
பண்புப் பெயராக). செய்யும் செய்கை - பொருந்தாதன செய்யும்
செய்கையும். சிற்றறிவுடையேம் எங்ஙனம் அறிவோம் என்பது
ஈற்றடியின் கருத்து.
|