3951. |
ஊழியு
மின்பமுங் காலமாகி |
|
யுயருந்
தவமாகி
ஏழிசை யின்பொருள் வாழும்வாழ்க்கை
வினையின் புணர்ப்பாகி
நாழிகை
யும்பல ஞாயிறாகிநளிர்
நாரை யூர்தன்னில்
வாழியர் மேதகு மைந்தர்செய்யும்
வகையின் விளைவாமே. 7
|
7.
பொ-ரை: சிவபெருமான் ஊழிக்காலமும், இன்பமும்,
காலங்களும் ஆகியவர். உயர்ந்த தவம் ஆகியவர். ஏழிசையின்
பயனாக விளங்குபவர். வாழ்கின்ற வாழ்க்கையில் உயிர்கள் செய்கின்ற வினையின் பயன்களை
உயிர்கட்குச் சேர்ப்பிப்பவர். நாழிகை முதலிய
சிறு காலங்களின் அளவுகளாகிப் பலவாகிய நாள்களும் ஆகியவர்.
இவைகளெல்லாம் குளிர்ச்சி பொருந்திய திரநாரையூர் என்னும்
திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமானின் அருள்
விளையாடல்களின் விளைவுகளேயாகும்.
கு-ரை:
ஊழியும் - பெருங்கால எல்லையாகிய பிரளய காலமும்.
காலம் - கார் முதலிய பருவகாலமும். ஏழு இசையின் பொருளாகி -
ஏழிசையின் பயனாகியும் . வாழும் வாழ்க்கை வினையின் புணர்ப்பாகி - உலக வாழ்க்கையில்
நிகழும் வினைகளின் சேர்க்கையாகி.
நாழிகையும் - சிறு கால எல்லையாகிய நாழிகையும். பல ஞாயிறு
ஆகி - பல தினங்களும் ஆகி. (இவைகளெல்லாம்). நளிர் -
குளிர்ச்சி பொருந்திய. மைந்தர் செய்யும் - சிவபெருமான் செய்யும்.
வகையின் விளைவாம் - திருவிளையாடல்களின் வகைகளினால்
விளைந்த விளைவேயாகும். இங்கே ஞாயிறு நாள் என்னப்பட்டது
இலக்கணை.
|