3958. |
மறைவ
ழக்கமி லாதமா பாவிகள் |
|
பறித
லைக்கையர் பாயுடுப் பார்களை
முறிய வாதுசெ யத்திரு வுள்ளமே
மறியு லாங்கையின் மாமழு வாளனே
ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயி லுறையுமெம் மாதியே. 3 |
3.
பொ-ரை: மான்கன்றையும், மழுவையும் கைகளில்
ஏந்தியுள்ள சிவபெருமானே! வேத நெறிப்படி ஒழுகாத கொடிய
பாவிகளாகிய, கையினால் முடி பறிக்கப்பட்ட தலையோடு பாயை
உடுத்தித் திரியும் சமணர்கள் தோல்வியுறும்படி அவர்களோடு வாது
செய்ய உமது திருவுளம் யாது? தென் ஆலவாயில் வீற்றிருந்தருளும்
எம் முதல்வரே! உலகனைத்தும்
உம் புகழே மிக வேண்டும்.
திருவருள்புரிவீராக!
கு-ரை:
மறை வழக்கம் - மறையின்படி ஒழுகுதல். வழக்கம்,
தொழிற் பெயர்; நடத்தல் என்பது பொருள். பறிதலை - பறிக்கப்பட்ட தலை.கையர் -
வஞ்சகர். முறிய - தோற்க. மறி - மான் கன்று.
|