3964. |
நீல
மேனி யமணர் திறத்துநின் |
|
சீலம்
வாதுசெ யத்திரு வுள்ளமே
மாலு நான்முக னுங்காண் பரியதோர்
கோல மேனிய தாகிய குன்றமே
ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயி லுறையுமெம் மாதியே. 9 |
9.
பொ-ரை: திருமாலும், பிரமனும் காணுதற்கரியவராய்,
அழகிய திருமேனியோடு நெருப்பு மலையாய் ஓங்கி நின்ற
சிவபெருமானே! கரிய உடலையுடைய சமணர்களோடு உமது
உயர்வினை வெளிப்படுத்தும் வண்ணம் வாது செய்ய உமது
திருவுள்ளம் யாது? அழகிய ஆலவாயில் வீற்றிருந்தருளும் எம்
ஆதிமூர்த்தியே! உலகனைத்தும்உம் புகழே மிக வேண்டும்.
திருவருள்புரிவீராக!
கு-ரை:
நீலமேனி அமணர் - மேல் 2 ஆம் பாட்டில் காரமண்
என்பதற்கு உரைத்தது உரைக்க. நீலம், பச்சை, கருமை இவற்றுள்
ஒன்றை மற்றொன்றாகக் கூறுவது மரபு. திறத்து - எதிரில். நின் சீலம்
- உமது சமயக் கொள்கையை. குன்றம் - நெருப்பு மலை
(அண்ணாமலை) யாய் நின்றமையைக் குறிக்கிறது.
|