3985. உறவுமாகியற் றவர்களுக்குமா
       நெதிகொடுத்துநீள் புவியிலங்குசீர்ப்
புறவமாநகர்க் கிறைவனேயெனத்
     தெறகிலா வினையே.                   8

       8.பொ-ரை: வறியவர்கட்கு உறவினராகி அவர்கட்கு
மாபெருஞ் செல்வத்தைக் கொடுத்து அருள்செய்கின்ற, இந்த
நீண்டபூமியில் மக்கள் புகழுடன் விளங்குகின்ற திருப்புறவம் என்னும்
மாநகரில் வீற்றிருந் தருளுகின்ற சிவபெருமானே என்று போற்றி
வணங்குபவர்களை வினைகள் துன்பம் செய்யா.

     கு-ரை: அற்றவர்க்கு - வறியோர்க்கு. உறவும் ஆகி - (தம்
செல்வப் பெருக்கைக் கருதாது) உறவினர்போல ஆகியும். மாநெதி
கொடுத்து - மிக்க செல்வத்தைக் கொடுத்து. நீள்புவி இலங்குசீர் -
(இவ்வாறு உதவி புரிந்துவரும் தன்மையால்.) நெடிய பூமி முழுதும்
புகழ் விளங்கும், புறவமாநகர். தெறகிலா வினை - அழிக்க வந்த
வினை (தாம், அழிந்துவிடும்).