4000. சந்தமார்பொழின் மிழலையீசனைச்
       சண்பைஞானசம் பந்தன்வாய்நவில்
பந்தமார்தமிழ் பத்தும்வல்லவர்
     பத்தரா குவரே.                      11

    11. பொ-ரை: சந்தன மணம் கமழும் சோலைகளையுடைய
திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும்
சிவபெருமானைப் போற்றி, சண்பையில் அவதரித்த ஞானசம்பந்தர்
அருளிய திருவருளால் பிணிக்கப்படும் இத்தமிழ்ப்பதிகத்தை
ஓதவல்லவர்கள் பத்தர்கள் ஆவர்.

     கு-ரை: சந்தம் ஆர் பொழில் - சந்தன மரங்கள் நிறைந்த
சோலை. பந்தம் ஆர் தமிழ் - கேட்டார்ப் பிணிக்கும் தகையவாயின
தமிழ்.