4008. |
பாதங்கைதொழ
வேதமோதுவர் |
|
பட்டினத்துறை
பல்லவனீச்சரத்
தாதியா யிருப்பார்
இவர்தன்மை யறிவாரார். 8 |
8.
பொ-ரை: தம் திருவடிகளைக் கைகளால் தொழுது
உலகத்தினர் நன்மையடையும் பொருட்டு வேதங்களைச் சிவபெருமான் அருளிச்செய்தார். காவிரிப்பூம்பட்டினத்துப்
பல்லவனீச்சரத்தில்
விரும்பி வீற்றிருந்தருளும் ஆதிமூர்த்தியாய் இருப்பவர். இவரது
தன்மையை யார் அறிவார்?
கு-ரை:
பாதம் கை தொழ - தமது திருவடிகளைக் கையால்
தொழுது உய்தி கூடும் பொருட்டு. வேதம் ஓதுவார் - வேதம்
முதலிய நீதிகளை உபதேசித்தருள்பவர். வேதம், என்பது
உபலட்சணம்.
|