4072. |
சுருதியான்
றலையும் நாமகண் மூக்குஞ் |
|
சுடரவன்
கரமுமுன் னியங்கு
பரிதியான் பல்லு மிறுத்தவர்க் கருளும்
பரமனார் பயின்றினி திருக்கை
விருதினான்
மறையு மங்கமோ ராறும்
வேள்வியும் வேட்டவர் ஞானங்
கருதினா ருலகிற் கருத்துடை யார்சேர்
கழுமல நகரென லாமே. 5
|
5.
பொ-ரை: பிரமனது தலையையும், சரஸ்வதியின் மூக்கையும்,
தீக்கடவுளின் கையையும், காலம் காட்டி முன் செல்லும் சூரியனின்
பல்லையும் இறுத்து, பின் உமாதேவி வேண்ட அவர்கட்கு அருளும்
புரிந்த சிவபெருமான் பயின்று
இனிதாக வீற்றிருந்தருளும் இடமாவது,
வழிவழிக் கேட்கும் தொழிலாகப் பயின்று வரும் புகழுடைய நான்கு
வேதங்களையும், ஆறு அங்கங்களையும் அறிந்து, அவற்றின்படி
வேத வேள்விகளைச் செய்பவர்களும், ஞான வேட்கை
உடையவர்களும், உலகில் பிறந்ததன் பெரும்பயனை அடைய
விரும்பும் கருத்துடையவர்களும் வசிக்கின்ற திருக்கழுமலநகர் எனக்
கூறலாம்.
கு-ரை:
சுருதியான் - பிரமா. சுருதியான் தலையும் நாமகள்
மூக்கும்:- கணவனுக்குத் தலையும் மனைவிக்கு மூக்கும் போயினது
என்பது ஓர் நயம். சுடரவன் - அக்கினி. கரம் - கையை
(வெட்டினமை) வெய்யவன் அங்கி விழுங்கத் திரட்டிய கையைத்
தறித்தான் என்று உந்தீபற (தி.8 திருவுந்தியார்-7)
|