4130. |
குற்றமி
லாதார் குரைகடல் சூழ்ந்த |
|
கோணமா
மலையமர்ந் தாரைக்
கற்றுணர் கேள்விக் காழியர் பெருமான்
கருத்துடை ஞானசம்பந்தன்
உற்றசெந் தமிழார் மலையீ ரைந்து
முரைப்பவர் கேட்பவ ருயர்ந்தோர்
சுற்றமு மாகித் தொல்வினை யடையார்
தோன்றுவர் வானிடைப் பொலிந்தே. 11 |
11.
பொ-ரை: குற்றமில்லாத குடிமக்கள் வாழ்கின்ற ஒலிக்கின்ற
கடல் சூழ்ந்த திருக்கோணமலையில் வீற்றிருந்தருளும் சிவ
பெருமானை,கற்றுணர் ஞானமும், கேள்வி ஞானமும் உடைய சீகாழி
வாழ் மக்களின் தலைவரான சிவஞானக் கருத்துடைய ஞானசம்பந்தர்
செந்தமிழில் அருளிய இப்பதிகத்தை உரைப்பவர்களும்
கேட்பவர்களும் உயர்ந்தோர் ஆவர். அவர்களுடைய சுற்றத்தாரும்
எல்லா நலன்களும் பெற்றுத் தொல்வினையிலிருந்து நீங்கப் பெறுவர்.
சிவலோகத்தில் பொலிவுடன் விளங்குவர்.
கு-ரை:
உயர்ந்தோர் சுற்றமும் ஆக. சுற்றம் - சூழ இருப்பவர்.
|