4138. |
தருமண
லோதஞ்சேர் தண்கட னித்திலம் |
|
பருமண லாக்கொண்டு பாவைநல் லார்கள்
வருமணங் கூட்டி மணஞ்செயு நல்லூர்ப்
பெருமணத் தான்பெண்ணோர் பாகங் [கொண்டானே. 2 |
2.
பொ-ரை: கடலலைகள் அழித்துவிடாமல் வைத்துள்ள
இயற்கைக் கரையிலுள்ள மணலோடு, பதுமை போன்ற சிறுமியர்
அலைகள் வீசிக்குவித்த, குளிர்ச்சி பொருந்திய கடலில் விளைந்த
முத்துக்களையே, பருத்த மணலாகக் கொண்டு சிற்றில் இழைத்து,
சிறுசோறிட்டு, நறுமணம் கமழும் மலர்களை வைத்துக் கொண்டு,
பாவைகட்கு மணம் செய்து விளையாடுகினற சிறப்பினையுடையது
நல்லூர்ப் பெருமணம். அப்பெருமணத் திருக்கோயிலின்கண்
வீற்றிருந்தருளும் சிவபெருமான் தன்னிற் பிரிவில்லா உமாதேவியை
இடப்பாகமாகக் கொண்டருளினன்.
கு-ரை:
சிறுமியர் விளையாட்டு: பாவை நல்லார்கள் -
பதுமைபோன்ற சிறுமியர்கள். தரு - பொருந்திய. மணல் -
மணலோடு.ஓதம் - அலைகள். சேர் - வீசிக்குவித்த. தண்கடல்
நித்திலம் - குளிர்ந்த கடலில் உண்டாகிய முத்துக்களையே.
பருமணலாகக்கொண்டு - பருத்த மணலாகக்கொண்டு. வரும்மணம் -
பொருந்திய மணத்தை உடைய மலர் முதலியவைகளை. கூட்டி-
வைத்துக் கொண்டு. மணம் செயும் - மணம் செய்து விளையாடுகின்ற
(நல்லூர்ப் பெருமணம்) பெண் ஓர் பாகம் கொண்டான் - பெண்ணை
இடப்பாகத்தில் கொண்டவன். கடந்த ஞானிகளுக்கே இல்லறத்தார்
நடத்தும் மனைவாழ்க்கை வீதியில் சிறுமியர்கள் மணம்செய்து
விளையாடும் விளையாட்டைப் போன்று தோன்றும் என்பது
இப்பாடலால் குறிக்கப்பெறுகிறது. பெண் ஓர்பாகம் கொண்டான்
ஆதலின் என்னையும் இவ்வாறு அருளினான்.
|