4144. |
தக்கிருந்
தீரன்று தாளா லரக்கனை |
|
உக்கிருந்
தொல்க வுயர்வரைக் கீழிட்டு
நக்கிருந் தீரின்று நல்லூர்ப் பெருமணம்
புக்கிருந் தீரெமைப் போக்கரு ளீரே.
8 |
8.
பொ-ரை: இறைவனே! யாண்டும் உம்முடைய சிறந்த
முழுமுதல் தன்மைக்கேற்ப வீற்றிருந்தருளுகின்றீர். முன்னாளில்
இலங்கையை ஆண்ட அசுரனான இராவணன் கயிலையைப்
பெயர்த்தெடுக்க முயன்றபோது, உயர்ந்த அம்மலையின்கீழ் அவன்
உடல் குழைந்து நொறுங்கும்படி சிரித்துக் கொண்டிருந்நீர். இந்நாளில்
திருமணநல்லூர் என்னும் திருத்தலத்தில் பெருமணம் என்னும்
திருக்கோயிலில் வீற்றிருந்து அருள்புரிகின்றீர். அடியார்களாகிய
நாங்கள் உம் திருவடிகளைச் சேர்வதற்கு அருள்புரிவீராக!.
கு-ரை:
வேண்டுகோள்: தக்கு இருந்தீர் - தக இருந்தீர்.
உக்கு இருந்து ஒல்க - உடல் நொறுங்கிக் குழைய. வரைக்கீழ் இட்டு
- கயிலை மலையின் கீழ் அழுத்தி. நக்கு இருந்தீர் - சிரித்துக்
கொண்டிருந்தீர். அன்று - இது அக்காலத்துச் செய்தது. இன்று -
இன்றைக்கும் இராவணனைத் தன் வழியில் செல்ல
அருளியதைப்போல. எமை - எங்களை. போக்கு - உமது திரு
வடியில் சேர்வதற்கு. அருளீர் - அருளுவீர்களாக.
|