4148. மறியார் கரத்தெந்தை யம்மா துமையோடும்
  பிறியாத பெம்மான் உறையும் இடமென்பர்
பொறிவாய் வரிவண்டு தன்பூம் பெடைபுல்கி
வெறியார் மலரில் துயிலும் விடைவாயே.        1

    1. பொ-ரை: மானைக் கரத்தில் ஏந்திய எந்தையாகிய பெருமான் உமையம்மையோடு பிரியாதவராய் உறையும் இடம், புள்ளிகளை
உடைய இசைவண்டு, தன் பெண் வண்டைக்கூடி, மணம் பொருந்திய
மலரில் துயிலும், திருவிடைவாய் என்பர். ‘பிரியாத’ என்பது எதுகை
நோக்கி வல்லெழுத்தாகத் திரிந்தது.