4153. |
கிள்ளை
மொழியா ளையிகழ்ந் தவன்முத்தீத் |
|
தள்ளித்
தலைதக் கனைக்கொண் டவர்சார்வாம்
வள்ளி மருங்குல் நெருங்கும் முலைச்செவ்வாய்
வெள்ளைந் நகையார் நடஞ்செய் விடைவாயே. 6 |
6.
பொ-ரை: சிவபெருமானை விலக்கி, பார்வதிதேவியை
இகழ்ந்த, தக்கனது தலையைக் கொய்து, பின் அருள் செய்த
பெருமானது இடம், வள்ளிக் கொடி போன்ற இடையையும்,
நெருங்கிய தனபாரங்களையும், சிவந்த வாயையும், வெள்ளிய
பற்களையும் உடைய, மகளிர் நடஞ்செய்யும், திருவிடைவாய்
என்பர்.
|