4154. பாதத் தொலிபா ரிடம்பாட நடஞ்செய்
  நாதத் தொலியர் நவிலும் இடமென்பர்
கீதத் தொலியுங் கெழுமும் முழவோடு
வேதத் தொலியும் பயிலும் விடைவாயே.        7

     8. பொ-ரை: தம்மை மதியாத இராவணனது வலிமையைக்
கெடுத்து, பின் அவன் பண்ணோடு யாழிசை கூட்டிப் பாடிய பாடல்
கேட்டு உகந்த சிவபெருமானது இடம், இடமகன்ற வீதிகள் தோறும்
திருவிழாக் காலங்களில் விண்ணவர்களும் வந்திறைஞ்சும்
சிறப்பினதாகிய திருவிடைவாய் என்பர்.