01. கோயில் - காந்தாரபஞ்சமம்
 
2801. ஆடினாய், நறுநெய்யொடு, பால், தயிர்! அந்தணர் பிரியாத
                                                          சிற்றம்பலம்
நாடினாய், இடமா! நறுங்கொன்றை நயந்தவனே!
பாடினாய், மறையோடு பல்கீதமும்! பல்சடைப் பனி கால் கதிர்
                                                           வெண்திங்கள்
சூடினாய்! அருளாய், சுருங்க எம தொல்வினையே!     1
உரை
   
2802. கொட்டமே கமழும் குழலாளொடு கூடினாய்! எருது ஏறினாய்!
                                                                     நுதல்
பட்டமே புனைவாய்! இசை பாடுவ பாரிடமா,
நட்டமே நவில்வாய்! மறையோர் தில்லை, நல்லவர், பிரியாத
                                                            சிற்றம்பலம்
இட்டமா உறைவாய்! இவை மேவியது என்னை கொலோ    2
உரை
   
2803. நீலத்து ஆர் கரிய மிடற்றார், நல்ல நெற்றிமேல் உற்ற
                                           கண்ணினார், பற்று
சூலத்தார், சுடலைப் பொடி நீறு அணிவார், சடையார்,
சீலத்தார் தொழுது ஏத்து சிற்றம்பலம் சேர்தலால், கழல் சேவடி
                                                                கைதொழ,
கோலத்தாய்! அருளாய்! உன காரணம் கூறுதுமே.     3
உரை
   
2804. கொம்பு அலைத்து அழகு எய்திய நுண் இடை,கோல
                               வாள்மதிபோலும் முகத்து இரண்டு
அம்பு அலைத்த கண்ணாள் முலை மேவிய வார்சடையான்
கமபலைத்து எழு காமுறு காளையர் காதலால் கழல்சேவடி
                                                              கைதொழ,
அம்பலத்து உறைவான் அடியார்க்கு அடையா,
                                                    வினையே.     4
உரை
   
2805. தொல்லையார் அமுது உண்ண, நஞ்சு உண்டது ஓர் தூ
                                   மணிமிடறா! பகுவாயது ஓர்
பல்லை ஆர் தலையில் பலி ஏற்று உழல் பண்டரங்கா!
தில்லையார் தொழுது ஏத்து சிற்றம்பலம் சேர்தலால்,
                                      கழல்சேவடி கைதொழ,
இல்லை ஆம் வினைதான் எரிய(ம்) மதில் எய்தவனே!     5
உரை
   
2806. ஆகம் தோய் அணி கொன்றையாய்! அனல் அங்கையாய்!
                                            அமரர்க்கு அமரா! உமை
பாகம் தோய் பகவா! பலி ஏற்று உழல் பண்டரங்கா!
மாகம் தோய் பொழில் மல்கு சிற்றம்பலம் மன்னினாய்!
                                       மழுவாளினாய்! அழல்
நாகம் தோய் அரையாய்! அடியாரை நண்ணா,
                                                        வினையே.     6
உரை
   
2807. சாதி ஆர் பலிங்கி(ன்)னொடு வெள்ளிய சங்க வார்குழையாய்!                                                                திகழப்படும்
வேதியா! விகிர்தா! விழவு ஆர் அணி தில்லை தன்னுள்
ஆதியாய்க்கு இடம் ஆய சிற்றம்பலம் அம் கையால் தொழ
                                                  வல் அடியார்களை
வாதியாது அகலும், நலியா, மலி தீவினையே.     7
உரை
   
2808. வேயின் ஆர் பணைத்தோளியொடு ஆடலை வேண்டினாய்!
                                        விகிர்தா! உயிர்கட்கு அமுது
ஆயினாய்! இடுகாட்டு எரி ஆடல் அமர்ந்தவனே!
தீயின் ஆர் கணையால் புரம்மூன்று எய்த செம்மையாய்!
                                         திகழ்கின்ற சிற்றம்பலம்
மேயினாய்! கழலே தொழுது எய்துதும், மேல் உலகே.     8
உரை
   
2809. தாரின் ஆர் விரி கொன்றையாய்! மதி தாங்கு நீள்சடையாய்!
                                                       தலைவா! நல்ல
தேரின் ஆர் மறுகின் திரு ஆர் அணி தில்லை தன்னுள்
சீரினால் வழிபாடு ஒழியாதது ஓர் செம்மையால் அழகு ஆய                                                              சிற்றம்பலம்
ஏரினால் அமர்ந்தாய்! உன சீர் அடி ஏத்துதுமே.     9
உரை
   
2810. இதன் மூலம் பாடல் கொடுக்கப்படவில்லை.     
உரை
   
2811. இதன் மூலம் பாடல் கொடுக்கப்படவில்லை.     
உரை