தொடக்கம் |
04. திருஆவடுதுறை - நாலடிமேல் வைப்பு - காந்தாரபஞ்சமம்
|
|
|
2834. |
இடரினும், தளரினும், எனது உறு நோய்
தொடரினும், உன கழல் தொழுது எழுவேன்;
கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே!
இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு
இல்லையேல்,
அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே! 1 |
|
உரை
|
|
|
|
|
2835. |
வாழினும், சாவினும், வருந்தினும், போய்
வீழினும், உன கழல் விடுவேன் அல்லேன்;
தாழ் இளந் தடம்புனல் தயங்கு சென்னிப்
போழ் இளமதி வைத்த புண்ணியனே!
இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு
இல்லையேல்,
அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே! 2 |
|
உரை
|
|
|
|
|
2836. |
நனவினும், கனவினும், நம்பா! உன்னை,
மனவினும், வழிபடல் மறவேன்; அம்மான்!
புனல் விரி நறுங்கொன்றைப்போது அணிந்து,
கனல் எரி-அனல் புல்கு கையவனே!
இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு
இல்லையேல்,
அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே! 3 |
|
உரை
|
|
|
|
|
2837. |
தும்மலொடு அருந்துயர் தோன்றிடினும்,
அம் மலர் அடி அலால் அரற்றாது, என் நா;
கைம் மல்கு வரிசிலைக் கணை ஒன்றினால்
மும்மதில் எரி எழ முனிந்தவனே!
இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு
இல்லையேல்,
அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே! 4 |
|
உரை
|
|
|
|
|
2838. |
கையது வீழினும், கழிவு உறினும்,
செய் கழல் அடி அலால் சிந்தை செய்யேன்;-
கொய் அணி நறுமலர் குலாய சென்னி
மை அணி மிடறு உடை மறையவனே!
இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு
இல்லையேல்,
அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே! 5 |
|
உரை
|
|
|
|
|
2839. |
வெந்துயர் தோன்றி ஓர் வெரு உறினும்,
எந்தாய்! உன் அடி அலால் ஏத்தாது, என் நா;
ஐந்தலை அரவு கொண்டு அரைக்கு அசைத்த
சந்த வெண்பொடி அணி சங்கரனே!
இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு
இல்லையேல்,
அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே! 6 |
|
உரை
|
|
|
|
|
2840. |
வெப்பொடு விரவி ஓர் வினை வரினும்,
அப்பா! உன் அடி அலால் அரற்றாது, என் நா;
ஒப்பு உடை ஒருவனை உரு அழிய
அப்படி அழல் எழ விழித்தவனே!
இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு
இல்லையேல்,
அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே! 7 |
|
உரை
|
|
|
|
|
2841. |
பேர் இடர் பெருகி, ஓர் பிணி வரினும்,
சீர் உடைக் கழல் அலால் சிந்தை செய்யேன்;
ஏர் உடை மணி முடி இராவணனை
ஆர் இடர் பட வரை அடர்த்தவனே!
இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு
இல்லையேல்,
அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே! 8 |
|
உரை
|
|
|
|
|
2842. |
உண்ணினும், பசிப்பினும், உறங்கினும்,
நின்
ஒண் மலர் அடி அலால் உரையாது, என் நா;கண்ணனும், கடி கமழ் தாமரை மேல்
அண்ணலும், அளப்பு அரிது ஆயவனே!
இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு
இல்லையேல்,
அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே! 9 |
|
உரை
|
|
|
|
|
2843. |
பித்தொடு மயங்கி ஓர் பிணி வரினும்,
அத்தா! உன் அடிஅலால் அரற்றாது, என் நா;
புத்தரும் சமணரும் புறன் உரைக்க,
பத்தர்கட்கு அருள்செய்து பயின்றவனே!
இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு
இல்லையேல்,
அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே! 10 |
|
உரை
|
|
|
|
|
2844. |
அலை புனல் ஆவடுதுறை அமர்ந்த
இலை நுனை வேல்படை எம் இறையை,
நலம் மிகு ஞானசம்பந்தன் சொன்ன
விலை உடை அருந்தமிழ்மாலை வல்லார்,
வினை ஆயின நீங்கிப் போய், விண்ணவர் வியன் உலகம்
நிலை ஆக முன் ஏறுவர்; நிலம்மிசை நிலை இலரே. 11 |
|
உரை
|
|
|
|