தொடக்கம் |
05. திருப்பூந்தராய் - ஈரடிமேல் வைப்பு - காந்தாரபஞ்சமம்
|
|
|
2845. |
தக்கன் வேள்வி தகர்த்தவன், பூந்தராய
மிக்க செம்மை விமலன், வியன் கழல்
சென்று சிந்தையில் வைக்க, மெய்க்கதி
நன்று அது ஆகிய நம்பன்தானே. 1 |
|
உரை
|
|
|
|
|
2846. |
புள் இனம் புகழ் போற்றிய பூந்தராய்
வெள்ளம் தாங்கு விகிர்தன் அடி தொழ,
ஞாலத்தில் உயர்வார், உள்கும் நன்நெறி
மூலம் ஆய முதலவன் தானே. 2 |
|
உரை
|
|
|
|
|
2847. |
வேந்தராய் உலகு ஆள விருப்பு உறின்,
பூந்தராய் நகர் மேயவன் பொன் கழல்
நீதியால் நினைந்து ஏத்தி உள்கிட,
சாதியா, வினை ஆனதானே. 3 |
|
உரை
|
|
|
|
|
2848. |
பூசுரர் தொழுது ஏத்திய பூந்தராய்
ஈசன் சேவடி ஏத்தி இறைஞ்சிட,
சிந்தை நோய் அவை தீர நல்கிடும்
இந்து வார்சடை எம் இறையே. 4 |
|
உரை
|
|
|
|
|
2849. |
பொலிந்த என்பு அணி மேனியன்-பூந்தராய்
மலிந்த புந்தியர் ஆகி வணங்கிட,
நும்தம் மேல்வினை ஓட, வீடுசெய்
எந்தை ஆய எம் ஈசன்தானே. 5 |
|
உரை
|
|
|
|
|
2850. |
பூதம் சூழப் பொலிந்தவன், பூந்தராய்
நாதன், சேவடி நாளும் நவின்றிட,
நல்கும், நாள்தொறும் இன்பம் நளிர்புனல்
பில்கு வார்சடைப் பிஞ்ஞகனே. 6 |
|
உரை
|
|
|
|
|
2851. |
புற்றின் நாகம் அணிந்தவன், பூந்தராய்
பற்றி வாழும் பரமனைப் பாடிட,
பாவம் ஆயின தீரப் பணித்திடும்
சே அது ஏறிய செல்வன் தானே. 7 |
|
உரை
|
|
|
|
|
2852. |
போதகத்து உரி போர்த்தவன், பூந்தராய்
காதலித்தான்-கழல் விரல் ஒன்றினால்,
அரக்கன் ஆற்றல் அழித்து, அவனுக்கு அருள்
பெருக்கி நின்ற எம் பிஞ்ஞகனே. 8 |
|
உரை
|
|
|
|
|
2853. |
மத்தம் ஆன இருவர் மருவு ஒணா
அத்தன் ஆனவன் மேவிய பூந்தராய்,
ஆள் அது ஆக, அடைந்து உய்ம்மின்! நும் வினை
மாளும் ஆறு அருள்செய்யும், தானே. 9 |
|
உரை
|
|
|
|
|
2854. |
பொருத்தம் இல் சமண் சாக்கியர் பொய்
கடிந்து,
இருத்தல் செய்த பிரான்-இமையோர் தொழ,
பூந்தராய் நகர் கோயில் கொண்டு, கை
ஏந்தும் மான்மறி எம் இறையே. 10 |
|
உரை
|
|
|
|
|
2855. |
புந்தியால் மிக நல்லவர் பூந்தராய்
அந்தம் இல் எம் அடிகளை, ஞானசம்
பந்தன் மாலை கொண்டு ஏத்தி வாழும்! நும்
பந்தம் ஆர் வினை பாறிடுமே. 11 |
|
உரை
|
|
|
|