தொடக்கம் |
11. திருப்புனவாயில் - காந்தாரபஞ்சமம்
|
|
|
2910. |
மின் இயல் செஞ்சடை வெண்பிறையன், விரி
நூலினன்,
பன்னிய நால்மறை பாடி ஆடி, பல ஊர்கள் போய்,
அன்னம் அன்ன(ந்) நடையாளொடும்(ம்) அமரும்(ம்) இடம்
புன்னை நல் மா மலர் பொன் உதிர்க்கும் புனவாயிலே. 1 |
|
உரை
|
|
|
|
|
2911. |
விண்டவர்தம் புரம் மூன்று எரித்து, விடை
ஏறிப் போய்,
வண்டு அமரும் குழல் மங்கையொடும் மகிழ்ந்தான் இடம்
கண்டலும் ஞாழலும் நின்று, பெருங்கடல் கானல்வாய்ப்
புண்டரீகம் மலர்ப் பொய்கை சூழ்ந்த புனவாயிலே. 2 |
|
உரை
|
|
|
|
|
2912. |
விடை உடை வெல் கொடி ஏந்தினானும், விறல்
பாரிடம்
புடை பட ஆடிய வேடத்தானும், புனவாயிலில்
தொடை நவில் கொன்றை அம் தாரினானும், சுடர் வெண்மழுப்
படை வலன் ஏந்திய, பால் நெய் ஆடும், பரமன் அன்றே! 3 |
|
உரை
|
|
|
|
|
2913. |
சங்க வெண்தோடு அணி காதினானும், சடை
தாழவே
அங்கை இலங்கு அழல் ஏந்தினானும்(ம்), அழகு ஆகவே
பொங்கு அரவம்(ம்) அணி மார்பினானும் புனவாயிலில்,
பைங்கண் வெள் ஏற்று அண்ணல் ஆகி நின்ற
பரமேட்டியே. 4 |
|
உரை
|
|
|
|
|
2914. |
கலி படு தண் கடல் நஞ்சம் உண்ட கறைக்கண்டனும்,
புலி அதள் பாம்பு அரைச் சுற்றினானும் புனவாயிலில்,
ஒலிதரு தண்புனலோடு, எருக்கும், மதமத்தமும்,
மெலிதரு வெண்பிறை, சூடி நின்ற விடை ஊர்தியே. 5 |
|
உரை
|
|
|
|
|
2915. |
வார் உறு மென்முலை மங்கை பாட நடம் ஆடிப்
போய்,
கார் உறு கொன்றை வெண்திங்களானும், கனல் வாயது ஓர்
போர் உறு வெண்மழு ஏந்தினானும் புனவாயிலில்,
சீர் உறு செல்வம் மல்க(வ்) இருந்த சிவலோகனே. 6 |
|
உரை
|
|
|
|
|
2916. |
பெருங்கடல் நஞ்சு அமுது உண்டு, உகந்து பெருங்காட்டு
இடைத்
திருந்து இளமென் முலைத் தேவி பாட(ந்) நடம் ஆடிப் போய்,
பொருந்தலர்தம் புரம் மூன்றும் எய்து, புனவாயிலில்
இருந்தவன் தன் கழல் ஏத்துவார்கட்கு இடர் இல்லையே. 7 |
|
உரை
|
|
|
|
|
2917. |
மனம் மிகு வேலன் அவ் வாள் அரக்கன் வலி
ஒல்கிட,
வனம் மிகு மால்வரையால் அடர்த்தான் இடம் மன்னிய
இனம் மிகு தொல்புகழ் பாடல் ஆடல் எழில் மல்கிய,
புனம் மிகு கொன்றை அம் தென்றல் ஆர்ந்த,
புனவாயிலே. 8 |
|
உரை
|
|
|
|
|
2918. |
திரு வளர் தாமரை மேவினானும், திகழ் பாற்கடல்
கரு நிற வண்ணனும், காண்பு அரிய கடவுள்(ள்) இடம்-
நரல் சுரிசங்கொடும் இப்பி உந்தி(ந்), நலம் மல்கிய
பொருகடல் வெண்திரை வந்து எறியும் புனவாயிலே.போதி எனப் பெயர் ஆயினாரும், பொறி
இல் சமண்-
சாதி, உரைப்பன கொண்டு, அயர்ந்து, தளர்வு எய்தன்மின்!
போது அவிழ் தண்பொழில் மல்கும் அம் தண் புனவாயிலில்
வேதனை நாள்தொறும் ஏத்துவார்மேல் வினை வீடுமே. 9 |
|
உரை
|
|
|
|
|
2919. |
இதன் மூலம் பாடல் கொடுக்கப்படவில்லை. |
|
உரை
|
|
|
|
|
2920. |
பொன்தொடியாள் உமை பங்கன் மேவும் புனவாயிலை,
கற்றவர்தாம் தொழுது ஏத்த நின்ற கடல் காழியான்-
நல்-தமிழ் ஞானசம்பந்தன்-சொன்ன தமிழ், நன்மையால்
அற்றம் இல் பாடல்பத்து, ஏத்த வல்லார் அருள்
சேர்வரே. 11 |
|
உரை
|
|
|
|