தொடக்கம் |
13. திருப்பூந்தராய் - காந்தாரபஞ்சமம்
|
|
|
2932. |
மின் அன எயிறு உடை விரவலோர்கள் தம்
துன்னிய புரம் உகச் சுளிந்த தொன்மையர்
புன்னை அம்பொழில் அணி பூந்தராய் நகர்
அன்ன அன்ன(ந்) நடை அரிவை பங்கரே. 1 |
|
உரை
|
|
|
|
|
2933. |
மூதணி முப்புரத்து எண்ணிலோர்களை
வேது அணி சரத்தினால், வீட்டினார் அவர்
போது அணி பொழில் அமர் பூந்தராய் நகர்
தாது அணி குழல் உமை தலைவர்; காண்மினே! 2 |
|
உரை
|
|
|
|
|
2934. |
தருக்கிய திரிபுரத்தவர்கள் தாம் உக,
பெருக்கிய சிலைதனைப் பிடித்த பெற்றியர்
பொரு(க்) கடல் புடை தரு பூந்தராய் நகர்
கரு(க்)கிய குழல் உமை கணவர்; காண்மினே! 3 |
|
உரை
|
|
|
|
|
2935. |
நாகமும் வரையுமே நாணும் வில்லுமா,
மாகம் ஆர் புரங்களை மறித்த மாண்பினர்
பூகம் ஆர் பொழில் அணி பூந்தராய் நகர்
பாகு அமர் பொழி உமை பங்கர்; காண்மினே! 4 |
|
உரை
|
|
|
|
|
2936. |
வெள் எயிறு உடைய அவ் விரவலார்கள் ஊர்
ஒள் எரியூட்டிய ஒருவனார் ஒளிர்
புள் அணி புறவினில் பூந்தராய் நகர்
கள் அணி குழல் உமை கணவர்; காண்மினே! 5 |
|
உரை
|
|
|
|
|
2937. |
துங்கு இயல் தானவர் தோற்றம் மா நகர்
அங்கியில் வீழ்தர ஆய்ந்த அம்பினர்
பொங்கிய கடல் அணி பூந்தராய் நகர்
அம் கயல் அன கணி அரிவை பங்கரே. 6 |
|
உரை
|
|
|
|
|
2938. |
அண்டர்கள் உய்ந்திட, அவுணர் மாய்தரக்
கண்டவர்; கடல்விடம் உண்ட கண்டனார்
புண்டரீக(வ்) வயல் பூந்தராய் நகர்
வண்டு அமர் குழலிதன் மணாளர்; காண்மினே! 7 |
|
உரை
|
|
|
|
|
2939. |
மா சின அரக்கனை வரையின் வாட்டிய,
காய் சின எயில்களைக் கறுத்த கண்டனார்
பூசுரர் பொலி தரு பூந்தராய் நகர்
காசை செய் குழல் உமை கணவர்; காண்மினே! 8 |
|
உரை
|
|
|
|
|
2940. |
தாம் முகம் ஆக்கிய அசுரர்தம் பதி
வேம் முகம் ஆக்கிய விகிர்தர் கண்ணனும்,
பூமகன், அறிகிலா பூந்தராய் நகர்க்
கோமகன், எழில் பெறும் அரிவை கூறரே. 9 |
|
உரை
|
|
|
|
|
2941. |
முத்தர அசுரர்கள் மொய்த்த முப்புரம்
அத் தகும் அழல் இடை வீட்டினார் அமண்
புத்தரும் அறிவு ஒணாப் பூந்தராய் நகர்
கொத்து அணி குழல் உமை கூறர்; காண்மினே! 10 |
|
உரை
|
|
|
|
|
2942. |
புரம் எரி செய்தவர், பூந்தராய் நகர்ப்
பரம் மலி குழல் உமை நங்கை பங்கரைப்
பரவிய பந்தன் மெய்ப் பாடல் வல்லவர்
சிரம் மலி சிவகதி சேர்தல் திண்ணமே. 11 |
|
உரை
|
|
|
|