தொடக்கம் |
17. திருவிசயமங்கை - காந்தாரபஞ்சமம்
|
|
|
2976. |
மரு அமர் குழல் உமை பங்கர், வார்சடை
அரவு அமர் கொள்கை எம் அடிகள், கோயில் ஆம்
குரவு, அமர் சுரபுனை, கோங்கு, வேங்கைகள்
விரவிய பொழில் அணி விசயமங்கையே. 1 |
|
உரை
|
|
|
|
|
2977. |
கீதம் முன் இசைதரக் கிளரும் வீணையர்
பூதம் முன் இயல்பு உடைப் புனிதர், பொன் நகர்
கோதனம் வழிபட, குலவு நால்மறை
வேதியர் தொழுது எழு விசயமங்கையே. 2 |
|
உரை
|
|
|
|
|
2978. |
அக்கு அரவு அரையினர், அரிவை பாகமாத்
தொக்க நல் விடை உடைச் சோதி, தொல்-நகர்
தக்க நல் வானவர், தலைவர், நாள்தொறும்
மிக்கவர், தொழுது எழு விசயமங்கையே. 3 |
|
உரை
|
|
|
|
|
2979. |
தொடை மலி இதழியும் துன் எருக்கொடு
புடை மலி சடை முடி அடிகள் பொன் நகர்
படை மலி மழுவினர், பைங்கண் மூரி வெள்
விடை மலி கொடி அணல், விசயமங்கையே. 4 |
|
உரை
|
|
|
|
|
2980. |
தோடு அமர் காதினன், துதைந்த நீற்றினன்,
ஏடு அமர் கோதையோடு இனிது அமர்வு இடம்
காடு அமர் மா கரி கதறப் போர்த்தது ஓர்
வேடம் அது உடை அணல் விசயமங்கையே. 5 |
|
உரை
|
|
|
|
|
2981. |
மைப் புரை கண் உமை பங்கன், வண் தழல்
ஒப்பு உரை மேனி எம் உடையவன், நகர்
அப்பொடு மலர்கொடு அங்கு இறைஞ்சி, வானவர்
மெய்ப்பட அருள்புரி விசயமங்கையே. 6 |
|
உரை
|
|
|
|
|
2982. |
இரும் பொனின் மலைவிலின், எரிசரத்தினால்,
வரும் புரங்களைப் பொடிசெய்த மைந்தன் ஊர்
சுரும்பு அமர் கொன்றையும், தூய மத்தமும்,
விரும்பிய சடை அணல் விசயமங்கையே. 7 |
|
உரை
|
|
|
|
|
2983. |
உளங்கையில், இருபதோடு ஒருபதும் கொடு,
ஆங்கு
அளந்து அரும் வரை எடுத்திடும் அரக்கனை,
தளர்ந்து உடல் நெரிதர, அடர்த்த தன்மையன்
விளங்கிழையொடும் புகும், விசயமங்கையே. 8 |
|
உரை
|
|
|
|
|
2984. |
மண்ணினை உண்டவன் மலரின்மேல் உறை
அண்ணல்கள் தமக்கு அளப்பு அரிய அத்தன் ஊர்
தண் நறுஞ்சாந்தமும் பூவும் நீர்கொடு
விண்ணவர் தொழுது எழு விசயமங்கையே. 9 |
|
உரை
|
|
|
|
|
2985. |
கஞ்சியும் கவளம் உண் கவணர் கட்டுரை
நஞ்சினும் கொடியன; நமர்கள் தேர்கிலார்
செஞ்சடைமுடி உடைத் தேவன் நன்நகர்
விஞ்சையர் தொழுது எழு விசயமங்கையே. 10 |
|
உரை
|
|
|
|
|
2986. |
விண்ணவர் தொழுது எழு விசயமங்கையை,
நண்ணிய புகலியுள் ஞானசம்பந்தன்,
பண்ணிய செந்தமிழ் பத்தும் வல்லவர்
புண்ணியர்; சிவகதி புகுதல் திண்ணமே. 11 |
|
உரை
|
|
|
|