தொடக்கம் |
21. திருக்கருக்குடி - காந்தாரபஞ்சமம்
|
|
|
3020. |
நனவிலும் கனவிலும், நாளும், தன் ஒளி
நினைவிலும் எனக்கு வந்து எய்தும் நின்மலன்-
கனைகடல் வையகம் தொழு கருக்கு
அனல்-எரி ஆடும் எம் அடிகள்; காண்மினே! 1 |
|
உரை
|
|
|
|
|
3021. |
வேதியன், விடை உடை விமலன், ஒன்னலர்
மூதெயில் எரி எழ முனிந்த முக்கணன்,
காது இயல் குழையினன், கருக்குடி அமர்
ஆதியை, அடி தொழ அல்லல் இல்லையே. 2 |
|
உரை
|
|
|
|
|
3022. |
மஞ்சு உறு பொழில் வளம் மலி கருக்கு
நஞ்சு உறு திருமிடறு உடைய நாதனார்
அம் சுரும்பு ஆர் குழல் அரிவை அஞ்சவே,
வெஞ்சுரம் தனில் விளையாடல் என்கொலோ? 3 |
|
உரை
|
|
|
|
|
3023. |
ஊன் உடைப் பிறவியை அறுக்க உன்னுவீா
கான் இடை ஆடலான் பயில் கருக்குடிக்
கோன் உயர் கோயிலை வணங்கி, வைகலும்,
வானவர் தொழு கழல் வாழ்த்தி, வாழ்மினே! 4 |
|
உரை
|
|
|
|
|
3024. |
சூடுவர், சடை இடைக் கங்கை நங்கையை;
கூடுவர், உலகு இடை ஐயம் கொண்டு; ஒலி
பாடுவர், இசை; பறை கொட்ட, நட்டி
ஆடுவர்; கருக்குடி அண்ணல் வண்ணமே! 5 |
|
உரை
|
|
|
|
|
3025. |
இன்பு உடையார், இசை வீணை; பூண் அரா,
என்பு, உடையார்; எழில் மேனிமேல் எரி
முன்பு உடையார்; முதல் ஏத்தும் அன்பருக்கு
அன்பு உடையார் கருக்குடி எம் அண்ணலே! 6 |
|
உரை
|
|
|
|
|
3026. |
காலமும் ஞாயிறும் தீயும் ஆயவர்
கோலமும் முடி அரவு அணிந்த கொள்கையர்;
சீலமும் உடையவர்; திருக்கருக்கு
சாலவும் இனிது, அவர் உடைய தன்மையே! 7 |
|
உரை
|
|
|
|
|
3027. |
எறிகடல் புடை தழுவு இலங்கை மன்னனை
முறிபட வரை இடை அடர்த்த மூர்த்தியார்
கறை படு பொழில் மதி தவழ், கருக்கு
அறிவொடு தொழுமவர் ஆள்வர், நன்மையே. 8 |
|
உரை
|
|
|
|
|
3028. |
பூ மனும் திசை முகன் தானும், பொற்பு அமர்
வாமனன், அறிகிலா வண்ணம் ஓங்கு எரி-
ஆம் என உயர்ந்தவன் அணி கருக்கு
நா மனனினில் வர நினைதல் நன்மையே. 9 |
|
உரை
|
|
|
|
|
3029. |
சாக்கியர், சமண் படு கையர், பொய்ம்மொழி
ஆக்கிய உரை கொளேல்! அருந் திரு(ந்) நமக்கு
ஆக்கிய அரன் உறை அணி கருக்குடிப்
பூக் கமழ் கோயிலே புடைபட்டு உய்ம்மினே! 10 |
|
உரை
|
|
|
|
|
3030. |
கானலில் விரைமலர் விம்மு காழியான்,
வானவன் கருக்குடி மைந்தன் தன் ஒளி
ஆன, மெய்ஞ் ஞானசம்பந்தன், சொல்லிய
ஊனம் இல் மொழி வலார்க்கு உயரும், இன்பமே. 11 |
|
உரை
|
|
|
|