தொடக்கம் |
32. திருஏடகம் - கொல்லி
|
|
|
3140. |
வன்னியும் மத்தமும் மதி பொதி சடையினன்,
பொன் இயல் திருவடி புதுமலர் அவைகொடு
மன்னிய மறையவர் வழிபட, அடியவர்
இன் இசை பாடல் ஆர் ஏடகத்து ஒருவனே. 1 |
|
உரை
|
|
|
|
|
3141. |
கொடி நெடுமாளிகை, கோபுரம், குளிர்மதி
வடிவு உற அமைதர, மருவிய ஏடகத்து
அடிகளை அடி பணிந்து அரற்றுமின், அன்பினால்!
இடிபடும் வினைகள் போய் இல்லை அது ஆகுமே. 2 |
|
உரை
|
|
|
|
|
3142. |
குண்டலம் திகழ்தரு காது உடைக் குழகனை
வண்டு அலம்பும் மலர்க்கொன்றை, வான்மதி, அணி
செண்டு அலம்பும் விடைச் சேடன்-ஊர் ஏடகம்
கண்டு கைதொழுதலும், கவலை நோய் கழலுமே. 3 |
|
உரை
|
|
|
|
|
3143. |
ஏலம் ஆர்தரு குழல் ஏழையோடு எழில் பெறும்
கோலம் ஆர்தரு விடைக் குழகனார் உறைவு இடம்
சால(ம்) மாதவிகளும், சந்தனம், சண்பகம்,
சீலம் ஆர் ஏடகம் சேர்தல் ஆம், செல்வமே. 4 |
|
உரை
|
|
|
|
|
3144. |
வரி அணி நயனி நல் மலைமகள் மறுகிட,
கரியினை உரிசெய்த கறை அணி மிடறினன்;
பெரியவன்; பெண்ணினோடு ஆண் அலி ஆகிய
எரியவன்; உறைவு இடம் ஏடகக் கோயிலே. 5 |
|
உரை
|
|
|
|
|
3145. |
பொய்கையின் பொழில் உறு புதுமலர்த் தென்றல்
ஆர்
வைகையின் வடகரை மருவிய ஏடகத்து
ஐயனை அடி பணிந்து, அரற்றுமின்! அடர்தரும்
வெய்ய வன்பிணி கெட, வீடு எளிது ஆகுமே. 6 |
|
உரை
|
|
|
|
|
3146. |
தடவரை எடுத்தவன் தருக்கு இற, தோள் அடர்
பட, விரல் ஊன்றியே, பரிந்து அவற்கு அருள் செய்தான்;
மடவரல், எருக்கொடு, வன்னியும், மத்தமும்,
இடம் உடைச் சடையினன்-ஏடகத்து இறைவனே. 8 |
|
உரை
|
|
|
|
|
3147. |
பொன்னும், மா மணிகளும், பொருதிரைச்
சந்து அகில்
தன்னுள் ஆர் வைகையின் கரைதனில் சமைவு உற;
அன்னம் ஆம் அயனும், மால், அடி முடி தேடியும்
இன்ன ஆறு என ஒணான்-ஏடகத்து ஒருவனே. 9 |
|
உரை
|
|
|
|
|
3148. |
குண்டிகைக் கையினர், குணம் இலாத் தேரர்கள்
பண்டியைப் பெருக்கிடும் பளகர்கள் பணிகிலர்
வண்டு இரைக்கும் மலர்க்கொன்றையும் வன்னியும்
இண்டை சேர்க்கும் சடை ஏடகத்து எந்தையே. 10 |
|
உரை
|
|
|
|
|
3149. |
கோடு, சந்தனம், அகில், கொண்டு இழி
வைகை நீர்
ஏடு சென்று அணைதரும் ஏடகத்து ஒருவனை,
நாடு தென்புகலியுள் ஞானசம்பந்தன
பாடல் பத்து இவை வலார்க்கு இல்லை ஆம், பாவமே. 11 |
|
உரை
|
|
|
|