தொடக்கம் |
33. திருஉசாத்தானம் - கொல்லி
|
|
|
3150. |
நீர் இடைத் துயின்றவன், தம்பி, நீள்
சாம்புவான்,
போர் உடைச் சுக்கிரீவன், அனுமான், தொழ;
கார் உடை நஞ்சு உண்டு, காத்து; அருள்செய்த எம்
சீர் உடைச் சேடர் வாழ் திரு உசாத்தானமே. 1 |
|
உரை
|
|
|
|
|
3151. |
கொல்லை ஏறு உடையவன், கோவண ஆடையன்,
பல்லை ஆர் படுதலைப் பலி கொளும் பரமனார்
முல்லை ஆர் புறவு அணி முது பதி நறை கமழ்
தில்லையான் உறைவு இடம் திரு உசாத்தானமே. 2 |
|
உரை
|
|
|
|
|
3152. |
தாம் அலார் போலவே தக்கனார் வேள்வியை
ஊமனார் தம் கனா ஆக்கினான், ஒரு நொடி;
காமனார் உடல் கெடக் காய்ந்த எம் கண்ணுதல்;
சேமமா உறைவு இடம் திரு உசாத்தானமே. 3 |
|
உரை
|
|
|
|
|
3153. |
மறி தரு கரத்தினான், மால்விடை ஏறியான்,
குறி தரு கோல நல் குணத்தினார் அடி தொழ,
நெறி தரு வேதியர் நித்தலும் நியமம் செய்
செறி தரு பொழில் அணி திரு உசாத்தானமே. 4 |
|
உரை
|
|
|
|
|
3154. |
பண்டு, இரைத்து அயனும் மாலும், பலபத்தர்கள்
தொண்டு இரைத்தும், மலர் தூவித் தோத்திரம் சொல,
கொண்டு இரைக் கொடியொடும் குருகினின் நல் இனம்
தெண்திரைக் கழனி சூழ் திரு உசாத்தானமே. 7 |
|
உரை
|
|
|
|
|
3155. |
மடவரல் பங்கினன்; மலைதனை மதியாது
சடசட எடுத்தவன் தலைபத்தும் நெரிதர,
அடர்தர ஊன்றி, அங்கே அவற்கு அருள்செய்தான்;
திடம் என உறைவு இடம் திரு உசாத்தானமே. 8 |
|
உரை
|
|
|
|
|
3156. |
ஆண் அலார், பெண் அலார், அயனொடு மாலுக்கும்
காண ஒணா வண்ணத்தான், கருதுவார் மனத்து உளான்,
பேணுவார் பிணியொடும் பிறப்பு அறுப்பான், இடம்
சேண் உலாம் மாளிகைத் திரு உசாத்தானமே. 9 |
|
உரை
|
|
|
|
|
3157. |
கானம் ஆர் வாழ்க்கையான், கார் அமண்
தேரர் சொல்
ஊனமாக் கொண்டு, நீர் உரைமின், உய்ய எனில்
வானம் ஆர் மதில், அணி மாளிகை, வளர் பொழில்,
தேன மா மதியம் தோய் திரு உசாத்தானமே! 10 |
|
உரை
|
|
|
|
|
3158. |
வரை திரிந்து இழியும் நீர் வளவயல் புகலி
மன்,
திரை திரிந்து எறிகடல்-திரு உசாத்தானரை
உரை தெரிந்து உணரும் சம்பந்தன், ஒண் தமிழ் வல்லார்
நரை திரை இன்றியே நன்நெறி சேர்வரே. 11 |
|
உரை
|
|
|
|