தொடக்கம் |
37. திருப்பிரமபுரம் - கொல்லி
|
|
|
3190. |
கரம் முனம் மலரால், புனல் மலர் தூவியே
கலந்து ஏத்துமின்-
பரமன் ஊர் பலபேரினால் பொலி, பத்தர் சித்தர்கள் தாம்
பயில்,
வரம் முன்ன(வ்) அருள் செய்ய வல்ல எம் ஐயன் நாள்தொறும்
மேய சீர்ப்
பிரமன் ஊர், பிரமாபுரத்து உறை பிஞ்ஞகன்(ன்) அருள்
பேணியே!
1 |
|
உரை
|
|
|
|
|
3191. |
விண்ணில் ஆர் மதி சூடினான், விரும்பும்
மறையவன் தன்
தலை
உண்ண நன் பலி பேணினான், உலகத்துள் ஊன் உயிரான்,
மலைப்-
பெண்ணின் ஆர் திருமேனியான்-பிரமாபுரத்து உறை கோயிலு
அண்ணல் ஆர் அருளாளனாய் அமர்கின்ற எம் உடை
ஆதியே. 2 |
|
உரை
|
|
|
|
|
3192. |
எல்லை இல் புகழாளனும்(ம்), இமையோர்
கணத்து உடன்
கூடியும்,
பல்லை ஆர் தலையில் பலி அது கொண்டு உகந்த படிறனும்
தொல்லை வையகத்து ஏறு தொண்டர்கள் தூ மலர் சொரிந்து
ஏத்தவே,
மல்லை அம் பொழில் தேன் பில்கும் பிரமாபுரத்து உறை
மைந்தனே. 3 |
|
உரை
|
|
|
|
|
3193. |
அடையலார் புரம் சீறி அந்தணர் ஏத்த,
மா மடமாதொடும்,
பெடை எலாம் கடல் கானல் புல்கும் பிரமாபுரத்து உறை
கோயிலான்;
தொடையல் ஆர் நறுங்கொன்றையான் தொழிலே பரவி நின்று
ஏத்தினால்,
இடை இலார், சிவலோகம் எய்துதற்கு; ஈது காரணம்
காண்மினே! 4 |
|
உரை
|
|
|
|
|
3194. |
வாய் இடை(ம்) மறை ஓதி, மங்கையர் வந்து
இடப் பலி
கொண்டு, போய்ப்-
போய் இடம்(ம்) எரிகான் இடைப் புரி நாடகம்(ம்) இனிது
ஆடினான்;
பேயொடும் குடிவாழ்வினான்-பிரமாபுரத்து உறை பிஞ்ஞகன்;
“தாய், இடைப் பொருள், தந்தை, ஆகும்” என்று ஓதுவார்க்கு
அருள்-தன்மையே! 5 |
|
உரை
|
|
|
|
|
3195. |
ஊடினால் இனி யாவது? என் உயர் நெஞ்சமே!-உறு
வல்வினைக்கு
ஓடி நீ உழல்கின்றது என்? “அழல் அன்று தன் கையில்
ஏந்தினான்,
பீடு நேர்ந்தது கொள்கையான்-பிரமாபுரத்து உறை வேதியன்,
ஏடு நேர் மதியோடு அரா அணி எந்தை” என்று நின்று
ஏத்திடே! 6 |
|
உரை
|
|
|
|
|
3196. |
செய்யன், வெள்ளியன், ஒள்ளியார்சிலர்
என்றும் ஏத்தி
நினைந்திட,
ஐயன், ஆண்டகை, அந்தணன், அருமா மறைப்பொருள்
ஆயினான்;
பெய்யும் மா மழை ஆனவன்; பிரமாபுரம் இடம் பேணிய
வெய்ய வெண்மழு ஏந்தியை(ந்) நினைந்து, ஏத்துமின், வினை
வீடவே! 7 |
|
உரை
|
|
|
|
|
3197. |
கன்று ஒரு(க்) கையில் ஏந்தி நல்விளவின்
கனி பட நூறியும்,
சென்று ஒருக்கிய மாமறைப்பொருள் தேர்ந்த செம்மலரோனும்
ஆய்,
அன்று அரக்கனைச் செற்றவன்(ன்) அடியும் முடி அவை
காண்கிலார்
பின் தருக்கிய தண்பொழில் பிரமாபுரத்து அரன் பெற்றியே! 8 |
|
உரை
|
|
|
|
|
3198. |
உண்டு உடுக்கை விட்டார்களும்(ம்), உயர்
கஞ்சி மண்டை
கொள் தேரரும்,
பண்டு அடக்கு சொல் பேசும் அப் பரிவு ஒன்று இலார்கள்
சொல் கொள்ளன்மின்!
தண்டொடு, அக்கு, வன் சூலமும், தழல், மா மழுப்படை, தன்
கையில்
கொண்டு ஒடுக்கிய மைந்தன்-எம் பிரமாபுரத்து உறை
கூத்தனே. 9 |
|
உரை
|
|
|
|
|
3199. |
பித்தனை, பிரமாபுரத்து உறை பிஞ்ஞகன்,
கழல் பேணியே, மெய்த்தவத்து நின்றோர்களுக்கு உரைசெய்து, நன்பொருள்
மேவிட
வைத்த சிந்தையுள் ஞானசம்பந்தன் வாய் நவின்று எழு
மாலைகள்,
பொய்த் தவம் பொறி நீங்க, இன் இசை போற்றி செய்யும்,
மெய்ம் மாந்தரே! 10 |
|
உரை
|
|
|
|