39. திருஆலவாய் - கொல்லி
 
3211. மானின் நேர் விழி மாதராய்! வழுதிக்கு மா பெருந்தேவி! கேள்
“பால் நல் வாய் ஒரு பாலன் ஈங்கு இவன்” என்று நீ பரிவு
                                                        எய்திடேல்!
ஆனைமாமலை ஆதி ஆய இடங்களில் பல அல்லல் சேர்
ஈனர்கட்கு எளியேன் அலேன்-திரு ஆலவாய் அரன்
                                                       நிற்கவே.     1
உரை
   
3212. ஆகமத்தொடு மந்திரங்கள் அமைந்த சங்கத பங்கமா,
பாகதத்தொடு இரைத்து உரைத்த சனங்கள் வெட்கு உறு
                                                             பக்கமா,
மா கதக்கரி போல்-திரிந்து, புரிந்து நின்று உணும் மாசு சேர்
ஆகதர்க்கு எளியேன் அலேன்-திரு ஆலவாய் அரன்
                                                         நிற்கவே.  2
உரை
   
3213. அத் தகு பொருள் உண்டும் இல்லையும் என்று நின்றவர்க்கு
                                                              அச்சமா,
ஒத்து ஒவ்வாமை மொழிந்து வாதில் அழிந்து, எழுந்த கவிப்
                                                                 பெயர்ச்
சத்திரத்தின் மடிந்து ஒடிந்து, சனங்கள் வெட்கு உற நக்கம்
                                                                     ஏய்,
சித்திரர்க்கு எளியேன் அலேன்-திரு ஆலவாய் அரன்
                                                          நிற்கவே.    3
உரை
   
3214. சந்துசேனனும், இந்துசேனனும், தருமசேனனும், கருமை சேர்
கந்துசேனனும், கனகசேனனும், முதல் அது ஆகிய பெயர்
                                                                கொளா
மந்தி போல்-திரிந்து, ஆரியத்தொடு செந்தமிழ்ப் பயன்
                                                      அறிகிலா
அந்தகர்க்கு எளியேன் அலேன்-திரு ஆலவாய் அரன்
                                                           நிற்கவே.      4
உரை
   
3215. கூட்டின் ஆர் கிளியின் விருத்தம், உரைத்தது ஓர் எலியின்
                                                              தொழில்,
பாட்டு மெய் சொலி, பக்கமே செலும் எக்கர்தங்களை, பல்
                                                                 அறம்
காட்டியே வரு மாடு எலாம் கவர் கையரை, கசிவு ஒன்று
                                                              இலாச்
சேட்டை கட்கு எளியேன் அலேன்-திரு ஆலவாய் அரன்
                                                நிற்கவே.      5
உரை
   
3216. கனகநந்தியும், புட்பநந்தியும், பவணநந்தியும், குமண மா
சுனகநந்தியும், குனகநந்தியும், திவணநந்தியும் மொழி கொளா
அனகநந்தியர், “மது ஒழிந்து அவமே தவம் புரிவோம்” எனும்
சினகருக்கு எளியேன் அலேன்-திரு ஆலவாய் அரன்
                                                         நிற்கவே.    6
உரை
   
3217. “பந்தணம்(ம்) அவை ஒன்று இலம்; பரிவு ஒன்று இலம்(ம்)!”
                                                       என வாசகம்
மந்தணம் பல பேசி, மாசு அறு சீர்மை இன்றி அநாயமே,
அந்தணம்(ம்), அருகந்தணம், மதிபுத்தணம், மதிசிந்தணச்
சிந்தணர்க்கு எளியேன் அலேன்-திரு ஆலவாய் அரன்
                                                           நிற்கவே.      7
உரை
   
3218. “மேல் எனக்கு எதிர் இல்லை” என்ற அரக்கனார் மிகை செற்ற
                                                                        தீப்
போலியைப் பணிய(க்)கிலாது, ஒரு பொய்த்தவம் கொடு,
                                                        குண்டிகை
பீலி கைக்கொடு, பாய் இடுக்கி, நடுக்கியே, பிறர் பின் செலும்
சீலிகட்கு எளியேன் அலேன்-திரு ஆலவாய் அரன்
                                                        நிற்கவே.      8
உரை
   
3219. பூமகற்கும் அரிக்கும் ஓர்வு அரு புண்ணியன்(ன்) அடி
                                                    போற்றிலார்
சாம் அவத்தையினார்கள் போல்-தலையைப் பறித்து, ஒரு
                                                        பொய்த்தவம்
வேம் அவத்தை செலுத்தி, மெய்ப் பொடி அட்டி, வாய்
                                                    சகதிக்கு நேர்
ஆம் அவர்க்கு எளியேன் அலேன்-திரு ஆலவாய் அரன்
                                                          நிற்கவே.   9
உரை
   
3220. தங்களுக்கும் அச் சாக்கியர்க்கும் தரிப்பு ஒணாத நல் சேவடி
எங்கள் நாயகன் ஏத்து ஒழிந்து, இடுக்கே மடுத்து, ஒரு
                                                   பொய்த் தவம்
பொங்கு நூல்வழி அன்றியே புலவோர்களைப் பழிக்கும்
                                                           பொலா
அங்கதர்க்கு எளியேன் அலேன்-திரு ஆலவாய் அரன்
                                                           நிற்கவே.   10
உரை
   
3221. “எக்கர் ஆம் அமண்கையருக்கு எளியேன் அலேன், திரு
                                                         ஆலவாய்ச்
சொக்கன் என் உள் இருக்கவே”, துளங்கும் முடித்
                                தென்னன்முன், இவை
தக்க சீர்ப் புகலிக்கு மன்-தமிழ் நாதன், ஞானசம்பந்தன்-வாய்
ஒக்கவே உரைசெய்த பத்தும் உரைப்பவர்க்கு இடர்
                                                 இல்லையே.   11
உரை