40. பொது - தனித் திருஇருக்குக்குறள் - கொல்லி
 
3222. கல்லால் நீழல் அல்லாத் தேவை
நல்லார் பேணார்; அல்லோம், நாமே.     1
உரை
   
3223. கொன்றை சூடி நின்ற தேவை
அன்றி, ஒன்றும் நன்று இலோமே.     2
உரை
   
3224. கல்லா நெஞ்சின் நில்லான் ஈசன்;
சொல்லாதாரோடு அல்லோம், நாமே.     3
உரை
   
3225. கூற்று உதைத்த நீற்றினானைப்
போற்றுவார்கள் தோற்றினாரே.     4
உரை
   
3226. காட்டுள் ஆடும் பாட்டு உளானை
நாட்டு உளாரும் தேட்டு உளாரே.     5
உரை
   
3227. தக்கன் வேள்விப் பொக்கம் தீர்த்த
மிக்க தேவர் பக்கத்தோமே.     6
உரை
   
3228. பெண் ஆண் ஆய விண்ணோர்கோவை
நண்ணாதாரை எண்ணோம், நாமே.     7
உரை
   
3229. தூர்த்தன் வீரம் தீர்த்த கோவை,
ஆத்தம் ஆக, ஏத்தினோமே.     8
உரை
   
3230. பூவினானும், தாவினானும்,
நாவினாலும் ஓவினாரே.     9
உரை
   
3231. மொட்டு அமணர், கட்டர்தேரர்,
பிட்டர் சொல்லை விட்டு உளோமே.     10
உரை
   
3232. அம் தண் காழிப் பந்தன் சொல்லைச்
சிந்தை செய்வோர் உய்ந்து உளோரே.     11
உரை