தொடக்கம் |
41. திருக்கச்சி ஏகம்பம் - திருஇருக்குக்குறள் - கொல்லி
|
|
|
3233. |
“கரு ஆர் கச்சித் திரு ஏகம்பத்து
ஒருவா!” என்ன, மருவா, வினையே. 1 |
|
உரை
|
|
|
|
|
3234. |
மதி ஆர் கச்சி, நதி ஏகம்பம்
விதியால் ஏத்த, பதி ஆவாரே. 2 |
|
உரை
|
|
|
|
|
3235. |
கலி ஆர் கச்சி, மலி ஏகம்பம்
பலியால் போற்ற, நலியா, வினையே. 3 |
|
உரை
|
|
|
|
|
3236. |
வரம் ஆர் கச்சிப்புரம் ஏகம்பம்
பரவா ஏத்த, விரவா, வினையே. 4 |
|
உரை
|
|
|
|
|
3237. |
“படம் ஆர் கச்சி, இடம் ஏகம்பத்து
உடையாய்!” என்ன, அடையா, வினையே. 5 |
|
உரை
|
|
|
|
|
3238. |
நலம் ஆர் கச்சி, நிலவு ஏகம்பம்
குலவா ஏத்த, கலவா, வினையே. 6 |
|
உரை
|
|
|
|
|
3239. |
கரியின் உரியன், திரு ஏகம்பன்,
பெரிய புரம் மூன்று எரிசெய்தானே. 7 |
|
உரை
|
|
|
|
|
3240. |
இலங்கை அரசைத் துலங்க ஊன்றும்
நலம் கொள் கம்பன் இலங்கு சரணே. 8 |
|
உரை
|
|
|
|
|
3241. |
மறையோன், அரியும், அறியா அனலன்
நெறி ஏகம்பம் குறியால் தொழுமே! 9 |
|
உரை
|
|
|
|
|
3242. |
பறியாத் தேரர் நெறி இல் கச்சிச்
செறிகொள் கம்பம் குறுகுவோமே. 10 |
|
உரை
|
|
|
|
|
3243. |
கொச்சை வேந்தன் கச்சிக் கம்பம்
மெச்சும் சொல்லை, நச்சும், புகழே. 11 |
|
உரை
|
|
|
|