43. சீகாழி - கௌசிகம்
 
3255. சந்தம் ஆர் முலையாள் தன கூறனார்
வெந்த வெண்பொடி ஆடிய மெய்யனார்
ந்தம் ஆர் பொழில் சூழ்தரு காழியு
எந்தையார், அடி என் மனத்து உள்ளவே.      1
உரை
   
3256. மான் இடம்(ம்) உடையார், வளர் செஞ்சடைத்
தேன் இடம் கொளும் கொன்றை அம் தாரினார்
கான் இடம் கொளும் தண்வயல் காழியார்
ஊன் இடம் கொண்டு என் உச்சியில் நிற்பரே.      2
உரை
   
3257. மை கொள் கண்டத்தர், வான்மதிச் சென்னியர்
பை கொள் வாள் அரவு ஆட்டும் படிறனார்
கை கொள் மான்மறியார், கடல் காழியு
ஐயன், அந்தணர் போற்ற இருக்குமே.      3
உரை
   
3258. புற்றின் நாகமும் பூளையும் வன்னியும்
கற்றை வார்சடை வைத்தவர், காழியுள
பொற்றொடியோடு இருந்தவர், பொன்கழல்,
உற்றபோது, உடன் ஏத்தி உணருமே!      4
உரை
   
3259. நலியும் குற்றமும், நம் உடல் நோய்வினை,
மெலியும் ஆறு அது வேண்டுதிரேல், வெய்ய
கலி கடிந்த கையார், கடல் காழியு
அலை கொள் செஞ்சடையார், அடி போற்றுமே!      5
உரை
   
3260. பெண் ஒர் கூறினர்; பேய் உடன் ஆடுவர்
பண்ணும் ஏத்து இசை பாடிய வேடத்தர்;
கண்ணும் மூன்று உடையார் கடல் காழியு
அண்ணல் ஆய அடிகள் சரிதையே!      6
உரை
   
3261. பற்றும் மானும் மழுவும் அழகு உற,
முற்றும் ஊர் திரிந்து, பலி முன்னுவர்
கற்ற மா நல் மறையவர் காழியு
பெற்றம் ஏறு அது உகந்தார் பெருமையே!      7
உரை
   
3262. எடுத்த வல் அரக்கன் முடிதோள் இற
அடர்த்து, உகந்து அருள் செய்தவர் காழியுள
கொடித் தயங்கு நன் கோயிலுள், இன்புஉற,
இடத்து மாதொடு தாமும் இருப்பரே.      8
உரை
   
3263. காலன் தன் உயிர் வீட்டு, கழல் அடி,
மாலும் நான் முகன்தானும், வனப்பு உற
ஓலம் இட்டு, முன் தேடி, உணர்கிலாச்
சீலம் கொண்டவன் ஊர் திகழ் காழியே.      9
உரை
   
3264. உருவம் நீத்தவர் தாமும், உறு துவர்
தரு வல் ஆடையினாரும், தகவு இலர்;
கருமம் வேண்டுதிரேல், கடல் காழியு
ஒருவன் சேவடியே அடைந்து, உய்ம்மினே!      10
உரை
   
3265. கானல் வந்து உலவும் கடல் காழியு
ஈனம் இ(ல்)லி இணை அடி ஏத்திடும்
ஞானசம்பந்தன் சொல்லிய நல்-தமிழ்,
மானம் ஆக்கும், மகிழ்ந்து உரைசெய்யவே.      11
உரை