தொடக்கம் |
46. திருக்கருகாவூர் - கௌசிகம்
|
|
|
3288. |
முத்து இலங்கு முறுவல்(ல்) உமை அஞ்சவே,
மத்தயானை மறுக(வ்), உரி வாங்கி, அக்
கத்தை போர்த்த கடவுள் கருகாவூர் எம்
அத்தர்; வண்ணம்(ம்) அழலும்(ம்) அழல்வண்ணமே. 1 |
|
உரை
|
|
|
|
|
3289. |
விமுதல் வல்ல சடையான்-வினை உள்குவார்க்கு
அமுதநீழல் அகலாததோர் செல்வம் ஆம்,
க(ம்) முதம் முல்லை கமழ்கின்ற, கருகாவூ
அமுதர்; வண்ணம்(ம்) அழலும்(ம்) அழல்வண்ணமே. 2 |
|
உரை
|
|
|
|
|
3290. |
பழக வல்ல சிறுத்தொண்டர், “பா இன் இசைக்
குழகர்!” என்று குழையா, அழையா, வரும்,
கழல் கொள் பாடல் உடையார் கருகாவூர் எம்
அழகர்; வண்ணம்(ம்) அழலும்(ம்) அழல்வண்ணமே. 3 |
|
உரை
|
|
|
|
|
3291. |
பொடி மெய் பூசி, மலர் கொய்து, புணர்ந்து
உடன்,
செடியர் அல்ல உள்ளம் நல்கிய செல்வத்தர்
கடி கொள் முல்லை கமழும் கருகாவூர் எம்
அடிகள்; வண்ணம்(ம்) அழலும்(ம்) அழல்வண்ணமே. 4 |
|
உரை
|
|
|
|
|
3292. |
மையல் இன்றி, மலர் கொய்து வணங்கிட,
செய்ய உள்ளம் மிக நல்கிய செல்வத்தர்
கைதல், முல்லை, கமழும் கருகாவூர் எம்
ஐயர்; வண்ணம்(ம்) அழலும்(ம்) அழல்வண்ணமே. 5 |
|
உரை
|
|
|
|
|
3293. |
மாசு இல் தொண்டர் மலர் கொண்டு வணங்கிட,
ஆசை ஆர, அருள் நல்கிய செல்வத்தர்;
காய் சினத்த விடையார் கருகாவூர் எம்
ஈசர்; வண்ணம்(ம்) எரியும்(ம்) எரிவண்ணமே. 6 |
|
உரை
|
|
|
|
|
3294. |
வெந்த நீறு மெய் பூசிய வேதியன்,
சிந்தை நின்று அருள் நல்கிய செல்வத்தன்-
கந்தம் மௌவல் கமழும் கருகாவூர் எம்
எந்தை; வண்ணம்(ம்) எரியும்(ம்) எரிவண்ணமே. 7 |
|
உரை
|
|
|
|
|
3295. |
பண்ணின் நேர் மொழியாளை ஓர்பாகனார்
மண்ணு கோலம்(ம்) உடைய(ம்) மலரானொடும்
கண்ணன் நேட அரியார் கருகாவூர் எம்
அண்ணல்; வண்ணம்(ம்) அழலும்(ம்) அழல்வண்ணமே. 9 |
|
உரை
|
|
|
|
|
3296. |
போர்த்த மெய்யினர், போது உழல்வார்கள்,
சொல்
தீர்த்தம் என்று தெளிவீர்! தெளியேன்மின்!
கார்த் தண்முல்லை கமழும் கருகாவூர் எம்
ஆத்தர் வண்ணம்(ம்) அழலும்(ம்) அழல்வண்ணமே. 10 |
|
உரை
|
|
|
|
|
3297. |
கலவமஞ்ஞை உலவும் கருகாவூ
நிலவு பாடல் உடையான் தன நீள்கழல்
குலவு ஞானசம்பந்தன் செந்தமிழ்
சொல வலார் அவர் தொல்வினை தீருமே. 11 |
|
உரை
|
|
|
|