தொடக்கம் |
48. திருமழபாடி - கௌசிகம்
|
|
|
3309. |
அங்கை ஆர் அழலன்(ன்), அழகு ஆர் சடைக்
கங்கையான், கடவுள்(ள்), இடம் மேவிய
மங்கையான், உறையும் மழபாடியைத்
தம் கையால்-தொழுவார் தகவாளரே. 1 |
|
உரை
|
|
|
|
|
3310. |
விதியும் ஆம்; விளைவு ஆம்; ஒளி ஆர்ந்தது
ஓர்
கதியும் ஆம்; கசிவு ஆம்; வசி ஆற்றம் ஆம்;
மதியும் ஆம்; வலி ஆம் மழபாடி
நதியம் தோய் சடை நாதன் நல் பாதமே. 2 |
|
உரை
|
|
|
|
|
3311. |
முழவினான், முதுகாடு உறை பேய்க்கணக்-
குழுவினான், குலவும் கையில் ஏந்திய
மழுவினான், உறையும் மழபாடியைத்
தொழுமின், நும் துயர் ஆனவை தீரவே! 3 |
|
உரை
|
|
|
|
|
3312. |
கலையினான், மறையான், கதி ஆகிய
மலையினான், மருவார் புரம் மூன்று எய்த
சிலையினான், சேர் திரு மழபாடியைத்
தலையினால் வணங்க, தவம் ஆகுமே. 4 |
|
உரை
|
|
|
|
|
3313. |
நல்வினைப் பயன், நால்மறையின் பொரு
கல்வி ஆய கருத்தன், உருத்திரன்,
செல்வன், மேய திரு மழபாடியைப்
புல்கி ஏத்துமது புகழ் ஆகுமே. 5 |
|
உரை
|
|
|
|
|
3314. |
நீடினார் உலகுக்கு உயிர் ஆய் நின்றான்;
ஆடினான், எரிகான் இடை மாநடம்;
பாடினார் இசை மா மழபாடியை
நாடினார்க்கு இல்லை, நல்குரவு ஆனவே. 6 |
|
உரை
|
|
|
|
|
3315. |
மின்னின் ஆர் இடையாள் ஒரு பாகம் ஆய்
மன்னினான் உறை மா மழபாடியைப்
பன்னினார், இசையால் வழிபாடு செய்து
உன்னினார், வினை ஆயின ஓயுமே. 7 |
|
உரை
|
|
|
|
|
3316. |
தென் இலங்கையர் மன்னன் செழு வரை-
தன்னில் அங்க அடர்த்து அருள் செய்தவன்
மன் இலங்கிய மா மழபாடியை
உன்னில், அங்க உறுபிணி இல்லையே. 8 |
|
உரை
|
|
|
|
|
3317. |
திருவின் நாயகனும், செழுந்தாமரை
மருவினானும், தொழ, தழல் மாண்பு அமர்
உருவினான் உறையும் மழபாடியைப்
பரவினார் வினைப்பற்று அறுப்பார்களே 9 |
|
உரை
|
|
|
|
|
3318. |
நலியும், நன்று அறியா, சமண்சாக்கியர்
வலிய சொல்லினும், மா மழபாடியு
ஒலிசெய் வார்கழலான் திறம் உள்கவே,
மெலியும், நம் உடல் மேல் வினை ஆனவே. 10 |
|
உரை
|
|
|
|
|
3319. |
மந்தம் உந்து பொழில் மழபாடி
எந்தை சந்தம் இனிது உகந்து ஏத்துவான்,
கந்தம் ஆர் கடல் காழியுள் ஞானசம்-
பந்தன் மாலை வல்லார்க்கு இல்லை, பாவமே. 11 |
|
உரை
|
|
|
|