தொடக்கம் |
52. திருஆலவாய் - திருவிராகம் - கௌசிகம்
|
|
|
3350. |
வீடு அலால் அவாய் இலாஅய், விழுமியார்கள்
நின்கழல்
பாடல் ஆலவாய் இலாய்! பரவ நின்ற பண்பனே!
காடு அலால் அவாய் இலாய்! கபாலி! நீள்கடி(ம்) மதில்
கூடல் ஆலவாயிலாய்! குலாயது என்ன கொள்கையே? 1 |
|
உரை
|
|
|
|
|
3351. |
பட்டு இசைந்த அல்குலாள் பாவையாள் ஒர்பாகமா
ஒட்டு இசைந்தது அன்றியும், உச்சியாள் ஒருத்தியா,
கொட்டு இசைந்த ஆடலாய்! கூடல் ஆலவாயிலாய்!
எட்டு இசைந்த மூர்த்தியாய்! இருந்த ஆறு இது என்னையே? 2 |
|
உரை
|
|
|
|
|
3352. |
குற்றம் நீ! குணங்கள் நீ! கூடல் ஆலவாயிலாய்!
சுற்றம் நீ! பிரானும் நீ! தொடர்ந்து இலங்கு சோதி நீ!
கற்ற நூல் கருத்தும் நீ! அருத்தம், இன்பம், என்று இவை
முற்றும் நீ! புகந்து முன் உரைப்பது என், முக(ம்)மனே? 3 |
|
உரை
|
|
|
|
|
3353. |
முதிரும் நீர்ச் சடைமுடி முதல்வ! நீ முழங்கு
அழல்
அதிர வீசி ஆடுவாய்! அழகன் நீ! புயங்கன் நீ!
மதுரன் நீ! மணாளன் நீ! மதுரை ஆலவாயிலாய்!
சதுரன் நீ! சதுர்முகன் கபாலம் ஏந்து சம்புவே! 4 |
|
உரை
|
|
|
|
|
3354. |
கோலம் ஆய நீள்மதிள் கூடல் ஆலவாயிலாய்!
பாலன் ஆய தொண்டு செய்து, பண்டும் இன்றும் உன்னையே,
நீலம் ஆய கண்டனே! நின்னை அன்றி, நித்தலும்,
சீலம் ஆய சிந்தையில் தேர்வது இல்லை, தேவரே. 5 |
|
உரை
|
|
|
|
|
3355. |
பொன் தயங்கு-இலங்கு ஒளி(ந்) நலம் குளிர்ந்த
புன்சடை
பின் தயங்க ஆடுவாய்! பிஞ்ஞகா! பிறப்பு இலீ!
கொன்றை அம் முடியினாய்! கூடல் ஆலவாயிலாய்!
நின்று இயங்கி ஆடலே நினைப்பதே நியமமே. 6 |
|
உரை
|
|
|
|
|
3356. |
ஆதி அந்தம் ஆயினாய்! ஆலவாயில் அண்ணலே!
சோதி அந்தம் ஆயினாய்! சோதியுள் ஒர் சோதியாய்!
கீதம் வந்த வாய்மையால் கிளர் தருக்கினார்க்கு அல்லால்,
ஓதி வந்த வாய்மையால் உணர்ந்து உரைக்கல் ஆகுமே? 7 |
|
உரை
|
|
|
|
|
3357. |
கறை இலங்கு கண்டனே! கருத்து இலாக் கருங்கடல்-
துறை இலங்கை மன்னனைத் தோள் அடர ஊன்றினாய்!
மறை இலங்கு பாடலாய்! மதுரை ஆலவாயிலாய்!
நிறை இலங்கு நெஞ்சினால் நினைப்பதே நியமமே. 8 |
|
உரை
|
|
|
|
|
3358. |
தா வண(வ்) விடையினாய்! தலைமை ஆக, நாள்தொறும்
கோவண(வ்) உடையினாய்! கூடல் ஆலவாயிலாய்!
தீ வணம் மலர்மிசைத் திசைமுகனும், மாலும், நின்
தூ வணம்(ம்) அளக்கிலார், துளக்கம் எய்துவார்களே 9 |
|
உரை
|
|
|
|
|
3359. |
தேற்றம் இல் வினைத்தொழில்-தேரரும்
சமணரும்
போற்று இசைத்து, நின் கழல் புகழ்ந்து புண்ணியம் கொளா
கூற்று உதைத்த தாளினாய்! கூடல் ஆலவாயிலாய்!
நால்-திசைக்கும் மூர்த்தி ஆகி நின்றது என்ன நன்மையே? 10 |
|
உரை
|
|
|
|
|
3360. |
போய நீர் வளம் கொளும் பொரு புனல் புகலியான்-
பாய கேள்வி ஞானசம்பந்தன்-நல்ல பண்பினால்,
ஆய சொல்லின் மாலைகொண்டு, ஆலவாயில் அண்ணலைத்
தீய தீர எண்ணுவார்கள் சிந்தை ஆவர், தேவரே. 11 |
|
உரை
|
|
|
|