தொடக்கம் |
56. திருப்பிரமபுரம் - பஞ்சமம்
|
|
|
3394. |
இறையவன், ஈசன், எந்தை, இமையோர் தொழுது
ஏத்த நின்ற
கறை அணி கண்டன், வெண்தோடு அணி காதினன், காலத்து
அன்று
மறை மொழி வாய்மையினான், மலையாளொடு மன்னு
சென்னிப்
பிறை அணி செஞ்சடையான், பிரமாபுரம் பேணுமினே! 1 |
|
உரை
|
|
|
|
|
3395. |
சடையினன், சாமவேதன், சரி கோவணவன்,
மழுவாள
படையினன், பாய் புலித்தோல் உடையான், மறை பல்கலை
நூல்
உடையவன், ஊனம் இ(ல்)லி, உடன் ஆய் உமை நங்கை
என்னும்
பெடையொடும் பேணும் இடம் பிரமாபுரம்; பேணுமினே! 2 |
|
உரை
|
|
|
|
|
3396. |
மாணியை நாடு காலன் உயிர் மாய்தரச் செற்று,
காள
காணிய ஆடல் கொண்டான், கலந்து ஊர்வழிச் சென்று,
பிச்சை
ஊண் இயல்பு ஆகக் கொண்டு, அங்கு உடனே உமை
நங்கையொடும்
பேணிய கோயில் மன்னும் பிரமாபுரம்; பேணுமினே! 3 |
|
உரை
|
|
|
|
|
3397. |
பார் இடம் விண்ணும் எங்கும் பயில் நஞ்சு
பரந்து மிண்ட,
பேர் இடர்த் தேவர்கணம், “பெருமான், இது கா!” எனலும்,
ஓர் இடத்தே கரந்து, அங்கு உமை நங்கையொடும்(ம்) உடனே
பேர் இடம் ஆகக் கொண்ட பிரமாபுரம் பேணுமினே! 4 |
|
உரை
|
|
|
|
|
3398. |
நச்சு அரவச் சடைமேல் நளிர் திங்களும்
ஒன்ற வைத்து,
அங்கு
அச்சம் எழ விடைமேல் அழகு ஆர் மழு ஏந்தி, நல்ல
இச்சை பகர்ந்து, “மிக இடுமின், பலி!” என்று, நாளும்
பிச்சை கொள் அண்ணல் நண்ணும் பிரமாபுரம் பேணுமினே! 5 |
|
உரை
|
|
|
|
|
3399. |
பெற்றவன்; முப்புரங்கள் பிழையா வண்ணம்
வாளியினால்
செற்றவன்; செஞ்சடையில்-திகழ் கங்கைதனைத் தரித்திட்டு,
ஒற்றை விடையினன் ஆய், உமை நங்கையொடும் உடனே
பெற்றிமையால் இருந்தான்; பிரமாபுரம் பேணுமினே! 6 |
|
உரை
|
|
|
|
|
3400. |
வேதம் மலிந்த ஒலி, விழவின்(ன்) ஒலி,
வீணை ஒலி,
கீதம் மலிந்து உடனே கிளர, திகழ் பௌவம் அறை
ஓதம் மலிந்து உயர் வான் முகடு ஏற, ஒண் மால்வரையான்
பேதையொடும் இருந்தான் பிரமாபுரம் பேணுமினே! 7 |
|
உரை
|
|
|
|
|
3401. |
இமையவர் அஞ்சி ஓட, எதிர்வார் அவர்தம்மை
இன்றி
அமைதரு வல் அரக்கன் அடர்த்து(ம்), மலை அன்று எடுப்ப,
குமை அது செய்து, பாட, கொற்றவாளொடு நாள் கொடுத்திட்டு
உமையொடு இருந்த பிரான் பிரமாபுரம் உன்னுமினே! 8 |
|
உரை
|
|
|
|
|
3402. |
ஞாலம் அளித்தவனும்(ம்) அரியும்(ம்),
அடியோடு முடி
காலம்பல செலவும், கண்டிலாமையினால் கதறி
ஓலம் இட, அருளி, உமை நங்கையொடும்(ம்) உடன் ஆய்
ஏல இருந்த பிரான் பிரமாபுரம் ஏத்துமினே! 9 |
|
உரை
|
|
|
|
|
3403. |
துவர் உறும் ஆடையினார், தொக்க பீலியர்
நக்க(அ)ரையர்
அவர் அவர் தன்மைகள் கண்டு அணுகேன்மி(ன்), அருள்
பெறுவீர்
கவர் உறு சிந்தை ஒன்றி, கழி காலம் எல்லாம் படைத்த
இவர் அவர் என்று இறைஞ்சி, பிரமாபுரம் ஏத்துமினே! 10 |
|
உரை
|
|
|
|
|
3404. |
உரை தரு நால்மறையோர் புகழ்ந்து ஏத்த,
ஒண் மாதினொடும்
வரை என வீற்றிருந்தான், மலிகின்ற பிரமபுரத்து
அரசினை ஏத்த வல்ல அணி சம்பந்தன் பத்தும் வல்லார்
விரைதரு விண்ணுலகம் எதிர் கொள்ள விரும்புவரே. 11 |
|
உரை
|
|
|
|