67. திருப்பிரமபுரம் - வழிமொழித் திருவிராகம் - சாதாரி
 
3514. சுரர் உலகு, நரர்கள் பயில் தரணிதலம், முரண் அழிய, அரண
                                                         மதில் முப்-
புரம் எரிய, விரவு வகை சர விசை கொள் கரம் உடைய
                                              பரமன் இடம் ஆம்
வரம் அருள வரல் முறையின் நிரல் நிறை கொள்வரு சுருதிசிர
                                                           உரையினால்,
பிரமன் உயர் அரன் எழில் கொள் சரண இணை பரவ, வளர்
                                                         பிரமபுரமே.      1
உரை
   
3515. தாணு மிகு ஆண் இசைகொடு, ஆணு வியர் பேணுமது காணும்
                                                                   அளவில்,
கோணும் நுதல் நீள் நயனி கோண் இல் பிடி மாணி, மது
                                                   நாணும் வகையே
ஏணு கரி பூண் அழிய, ஆண் இயல் கொள் மாணி பதி-சேண்
                                                          அமரர்கோன்
வேணுவினை ஏணி, நகர் காணில், திவி காண, நடு
                                                  வேணுபுரமே.        2
உரை
   
3516. பகல் ஒளிசெய் நக மணியை, முகை மலரை, நிகழ் சரண
                                             அகவு முனிவர்க்கு
அகலம் மலி சகல கலை மிக உரைசெய் முகம் உடைய
                                             பகவன் இடம் ஆம்
பகை களையும் வகையில் அறுமுக இறையை மிக அருள,
                                         நிகர் இல் இமையோர்
புக, உலகு புகழ, எழில் திகழ, நிகழ் அலர் பெருகு
                                                புகலிநகரே.       3
உரை
   
3517. அம் கண் மதி, கங்கை நதி, வெங்கண் அரவங்கள், எழில்
                                                        தங்கும் இதழித்
துங்க மலர், தங்கு சடை அங்கி நிகர் எங்கள் இறை தங்கும்
                                                           இடம் ஆம்
வெங்கதிர் விளங்கு உலகம் எங்கும் எதிர் பொங்கு எரி
                                    புலன்கள் களைவோர்
வெங் குரு விளங்கி உமைபங்கர் சரணங்கள் பணி வெங்குரு                                                                 அதே. 4
உரை
   
3518. ஆண் இயல்பு காண, வனவாண இயல் பேணி, எதிர்
                                             பாணமழை சேர்
ணி அற, நாணி அற, வேணு சிலை பேணி அற, நாணி விசயன்
பாணி அமர் பூண, அருள் மாணு பிரமாணி இடம் ஏணி
                                                          முறையில்
பாணி உலகு ஆள, மிக ஆணின் மலி தோணி நிகர்
                                                   தோணிபுரமே.      5
உரை
   
3519. “நிராமய! பராபர! புராதன! பராவு சிவ! ராக! அருள்!” என்று,
இராவும் எதிராயது பராய் நினை புராணன், அமராதி பதி ஆம்
அராமிசை இராத எழில் தரு ஆய அர பராயண வராக உரு
                                                                      வா-
தராயனை விராய் எரி பராய், மிகு தராய் மொழி விராய
                                                             பதியே.    6
உரை
   
3520. அரணை உறு முரணர் பலர் மரணம் வர, இரணம் மதில் அரம்
                                                             மலி படைக்
கரம் விசிறு விரகன், அமர் கரணன், உயர் பரன், நெறி கொள்
                                                   கரனது இடம் ஆம்
பரவு அமுது விரவ, விடல் புரளம் உறும் அரவை அரி சிரம்
                                                           அரிய, அச்
சிரம் அரன சரணம் அவை பரவ, இரு கிரகம் அமர் சிரபுரம்
                                                              அதே. 7
உரை
   
3521. அறம் அழிவு பெற உலகு தெறு புயவன் விறல் அழிய, நிறுவி
                                                             விரல், மா-
மறையின் ஒலி முறை முரல்செய் பிறை எயிறன் உற, அருளும்
                                                இறைவன் இடம் ஆம்
குறைவு இல் மிக நிறைதை உழி, மறை அமரர் நிறை அருள,
                                                  முறையொடு வரும்
புறவன் எதிர் நிறை நிலவு பொறையன் உடல் பெற, அருளு
                                                   புறவம் அதுவே.  8
உரை
   
3522. விண் பயில, மண் பகிரி, வண் பிரமன் எண் பெரிய பண்
                                              படை கொள் மால்,
கண் பரியும் ஒண்பு ஒழிய, நுண்பொருள்கள் தண் புகழ் கொள்
                                                  கண்டன் இடம் ஆம்
மண் பரியும் ஒண்பு ஒழிய, நுண்பு சகர் புண் பயில விண்
                                                        படர, அச்
சண்பை மொழி பண்ப முனி கண் பழி செய் பண்பு களை
                                                     சண்பை நகரே.  9
உரை
   
3523. பாழி உறை வேழம் நிகர் பாழ் அமணர், சூழும் உடலாளர்,
                                                           உணரா
ஏழின் இசை யாழின் மொழி ஏழை அவள் வாழும் இறை
                                                தாழும் இடம் ஆம்
கீழ், இசை கொள் மேல் உலகில், வாழ் அரசு சூழ் அரசு
                                                 வாழ, அரனுக்கு
ஆழிய சில்காழி செய, ஏழ் உலகில் ஊழி வளர் காழி
                                                            நகரே.    10
உரை
   
3524. நச்சு அரவு கச்சு என அசைச்சு, மதி உச்சியின் மிலைச்சு, ஒரு
                                                                 கையால்
மெய்ச் சிரம் அணைச்சு, உலகில் நிச்சம் இடு பிச்சை அமர்
                                                பிச்சன் இடம் ஆம்
மச்சம் மதம் நச்சி மதமச் சிறுமியைச் செய் தவ அச்ச விரதக்
கொச்சை முரவு அச்சர் பணிய, சுரர்கள் நச்சி மிடை
                                               கொச்சைநகரே.      11
உரை
   
3525. ஒழுகல் அரிது அழி கலியில், உழி உலகு பழி பெருகு
                                          வழியை நினையா,
முழுது உடலில் எழும் மயிர்கள் தழுவும் முனிகுழுவினொடு,
                                                  கெழுவு சிவனைத்
தொழுது, உலகில் இழுகும் மலம் அழியும் வகை கழுவும்
                                               உரை கழுமல நகர்
பழுது இல் இறை எழுதும் மொழி தமிழ் விரகன் வழி
                           மொழிகள் மொழி தகையவே.      12
உரை