71. திருவைகாவூர் - திருவிராகம் - சாதாரி
 
3559. கோழை மிடறு ஆக, கவி கோளும் இல ஆக, இசை கூடும்
                                                            வகையால்,
ஏழை அடியார் அவர்கள் யாவை சொன சொல் மகிழும் ஈசன்
                                                             இடம் ஆம்
தாழை இளநீர் முதிய காய் கமுகின் வீழ, நிரை தாறு சிதறி,
வாழை உதிர் வீழ் கனிகள் ஊறி, வயல் சேறு செயும்
                                                 வைகாவிலே.       1
உரை
   
3560. அண்டம் உறு மேருவரை, அங்கி கணை, நாண் அரவு அது,
                                                      ஆக, எழில் ஆர்
விண்டவர் தம் முப்புரம் எரித்த விகிர்தன்(ன்) அவன் விரும்பும்
                                                              இடம் ஆம்
புண்டரிகம் மா மலர்கள் புக்கு விளையாடு வயல் சூழ் தடம்
                                                                 எலாம்
வண்டின் இசை பாட, அழகு ஆர் குயில் மிழற்று பொழில்
                                                         வைகாவிலே.   2
உரை
   
3561. ஊனம் இலர் ஆகி, உயர் நல்-தவம் மெய் கற்று, அவை
                                               உணர்ந்த அடியார்
ஞானம் மிக நின்று தொழ, நாளும் அருள் செய்ய வல நாதன்
                                                             இடம் ஆம்
ஆன வயல் சூழ்தரும் மல் சூழி அருகே, பொழில்கள் தோறும்,
                                                              அழகு ஆர்
வான மதியோடு மழை நீள் முகில்கள் வந்து அணவும்
                                                  வைகாவிலே.      3
உரை
   
3562. இன்ன உரு, இன்ன நிறம், என்று அறிவதேல் அரிது;
                                                  நீதிபலவும்
தன்ன உரு ஆம் என மிகுத்த தவன் நீதியொடு தான் அமர்வு
                                                                  இடம்
முன்னை வினை போம் வகையினால், முழுது உணர்ந்து
                                             முயல்கின்ற முனிவர்
மன்ன, இருபோதும் மருவித் தொழுது சேரும், வயல்
                                                வைகாவிலே.       4
உரை
   
3563. வேதமொடு வேள்வி பல ஆயின மிகுத்து, விதி ஆறு சமயம்
ஓதியும் உணர்ந்தும் உள தேவர் தொழ, நின்று அருள்செய்
                                               ஒருவன் இடம் ஆம்
மேதகைய கேதகைகள் புன்னையொடு ஞாழல் அவை மிக்க
                                                             அழகால்,
மாதவி மணம் கமழ, வண்டுபல பாடு பொழில் வைகாவிலே. 5
உரை
   
3564. நஞ்சு அமுது செய்த மணிகண்டன், நமை ஆள் உடைய ஞான
                                                                   முதல்வன்,
செஞ்சடை இடைப் புனல் கரந்த சிவலோகன், அமர்கின்ற
                                                             இடம் ஆம்
அம் சுடரொடு, ஆறுபதம், ஏழின் இசை, எண் அரிய வண்ணம்
                                                                   உள ஆய்,
மஞ்சரொடு மாதர்பலரும் தொழுது சேரும், வயல்
                                             வைகாவிலே.           6
உரை
   
3565. நாளும் மிகு பாடலொடு ஞானம் மிகு நல்ல மலர், வல்ல
                                                         வகையால்,
தோளினொடு கை குளிரவே தொழுமவர்க்கு அருள்செய் சோதி
                                                               இடம் ஆம்
நீளி வளர் சோலைதொறும் நாளிபல துன்று கனி நின்றது
                                                                உதிர,
வாளை குதிகொள்ள, மது நாற மலர் விரியும் வயல்
                                                வைகாவிலே.        7
உரை
   
3566. கை இருபதோடு மெய் கலங்கிட, விலங்கலை எடுத்த கடியோன்
ஐ-இருசிரங்களை ஒருங்கு உடன் நெரித்த அழகன் தன் இடம்
                                                                      ஆம்
கையின் மலர் கொண்டு, நல காலையொடு மாலை, கருதி,
                                                             பலவிதம்
வையகம் எலாம் மருவி நின்று தொழுது ஏத்தும், எழில்
                                                    வைகாவிலே.     8
உரை
   
3567. அந்தம் முதல்-ஆதி பெருமான் அமரர்கோனை, அயன் மாலும்
                                                                 இவர்கள்
“எந்தைபெருமான்! இறைவன்!” என்று தொழ, நின்று
                            அருள்செய் ஈசன் இடம் ஆம்
சிந்தை செய்து பாடும் அடியார், பொடி மெய் பூசி எழு
                                       தொண்டர் அவர்கள்
வந்து பல சந்த மலர், முந்தி அணையும் பதி நல்
                                         வைகாவிலே.         9
உரை
   
3568. “ஈசன், எமை ஆள் உடைய எந்தை பெருமான், இறைவன்”
                                                  என்று தனையே
பேசுதல் செயா அமணர், புத்தர் அவர், சித்தம் அணையா
                                                    அவன் இடம்
தேசம் அது எலாம் மருவி நின்று பரவித் திகழ நின்ற
                                                    புகழோன்,
வாசமலர் ஆன பல தூவி, அணையும் பதி நல்
                                             வைகாவிலே.           10
உரை
   
3569. முற்றும் நமை ஆள் உடைய முக்கண் முதல்வன் திரு
                                        வைகாவில் அதனை,
செற்ற மலின் ஆர் சிரபுரத் தலைவன்-ஞானசம்பந்தன்                                   -                    உரைசெய்
உற்ற தமிழ் மாலை ஈர்-ஐந்தும் இவை வல்லவர் உருத்திரர்
                                                              எனப்-
பெற்று, அமரலோகம் மிக வாழ்வர்; பிரியார், அவர் பெரும்
                                                          புகழொடே.  11
உரை