74. திருத் தேவூர் - திருவிராகம் - சாதாரி
 
3592. காடு பயில் வீடு, முடை ஓடு கலன், மூடும் உடை ஆடை
                                                        புலிதோல்,
தேடு பலி ஊண் அது உடை வேடம் மிகு வேதியர் திருந்து
                                                         பதிதான்-
நாடகம் அது ஆட ம(ஞ்)ஞை, பாட அரி, கோடல் கைம்
                                                மறிப்ப, நலம் ஆர்
சேடு மிகு பேடை அனம் ஊடி மகிழ் மாடம் மிடை தேவூர்
                                                          அதுவே.   1
உரை
   
3593. கோள் அரவு, கொன்றை, நகு வெண் தலை, எருக்கு, வனி,
                                                கொக்கு இறகொடும்,
வாள் அரவு, தண்சலமகள், குலவு செஞ்சடை வரத்து இறைவன்
                                                                         ஊர்
வேள் அரவு கொங்கை இள மங்கையர்கள் குங்குமம்
                                    விரைக்கும் மணம் ஆர்
தேள் அரவு தென்றல் தெரு எங்கும் நிறைவு ஒன்றி வரு
                                                  தேவூர் அதுவே.  2
உரை
   
3594. பண் தடவு சொல்லின் மலை வல்லி உமை பங்கன், எமை
                                                ஆளும் இறைவன்,
எண் தடவு வானவர் இறைஞ்சு கழலோன், இனிது இருந்த
                                                        இடம் ஆம்
விண் தடவு வார் பொழில் உகுத்த நறவு ஆடி, மலர் சூடி,
                                                      விரை ஆர்
செண் தடவும் மாளிகை செறிந்து, திரு ஒன்றி வளர் தேவூர்
                                                           அதுவே.  3
உரை
   
3595. மாசு இல் மனம் நேசர் தமது ஆசை வளர் சூலதரன், மேலை
                                                           இமையோர்
ஈசன், மறை ஓதி, எரி ஆடி, மிகு பாசுபதன், மேவு பதிதான்-
வாசமலர் கோது குயில் வாசகமும், மாதர் அவர் பூவை
                                                         மொழியும்
தேச ஒலி, வீணையொடு கீதம் அது, வீதி நிறை தேவூர்
                                                          அதுவே.    4
உரை
   
3596. கானம் உறு மான் மறியன்; ஆனை உரி போர்வை; கனல்
                                                ஆடல் புரிவோன்;
ஏன எயிறு, ஆமை, இள நாகம், வளர் மார்பின் இமையோர்
                                                    தலைவன்; ஊர்
வான் அணவு சூதம், இள வாழை, மகிழ், மாதவி, பலா, நிலவி,
                                                                        வார்
தேன் அமுது உண்டு, வரிவண்டு மருள் பாடி வரு தேவூர்
                                                            அதுவே.   5
உரை
   
3597. ஆறினொடு கீறுமதி ஏறு சடை, ஏறன்; அடையார் நகர்கள்
                                                                தான்,
சீறுமவை, வேறுபட நீறு செய்த நீறன்; நமை ஆளும் அரன்;
                                                                    ஊர்
வீறு மலர் ஊறும் மது ஏறி, வளர்வு ஆய விளைகின்ற கழனிச்
சேறு படு செங்கயல் விளிப்ப, இள வாளை வரு தேவூர்
                                                          அதுவே.    6
உரை
   
3598. கன்றி எழ வென்றி நிகழ் துன்று புரம், அன்று, அவிய, நின்று
                                                           நகைசெய்
என் தனது சென்று நிலை; எந்தை தன தந்தை; அமர் இன்ப
                                                           நகர்தான்-
முன்றில் மிசை நின்ற பலவின் கனிகள் தின்று, கறவைக்
                                                     குருளைகள்
சென்று, இசைய நின்று துளி, ஒன்ற விளையாடி, வளர் தேவூர்
                                                            அதுவே.  7
உரை
   
3599. ஓதம் மலிகின்ற தென் இலங்கை அரையன் மலி புயங்கள்
                                                              நெரிய,
பாதம் மலிகின்ற விரல் ஒன்றினில் அடர்த்த பரமன் தனது                                                                இடம்
போதம் மலிகின்ற மடவார்கள் நடம் ஆடலொடு பொங்கும்
                                                              முரவம்,
சேதம் மலிகின்ற கரம் வென்றி தொழிலாளர் புரி தேவூர்
                                                        அதுவே.   8
உரை
   
3600. வண்ணம் முகில் அன்ன எழில் அண்ணலொடு, சுண்ணம் மலி
                                                 வண்ணம் மலர்மேல்
நண் அவனும், எண் அரிய விண்ணவர்கள் கண்ணவன் நலம்
                                                    கொள் பதிதான்-
வண்ண வன நுண் இடையின், எண் அரிய, அன்ன நடை,
                                                 இன்மொழியினார்
திண்ண வண மாளிகை செறிந்த இசை யாழ் மருவு தேவூர்
                                                        அதுவே.   9
உரை
   
3601. பொச்சம் அமர் பிச்சை பயில் அச் சமணும், எச்சம் அறு
                                               போதியரும், ஆம்
மொச்சை பயில் இச்சை கடி பிச்சன், மிகு நச்சு அரவன்,
                                               மொச்ச நகர்தான்-
மைச் சில் முகில் வைச்ச பொழில்...     10
உரை
   
3602. துங்கம் மிகு பொங்கு அரவு தங்கு சடை நங்கள் இறை துன்று
                                                            குழல் ஆர்
செங்கயல்கண் மங்கை உமை நங்கை ஒருபங்கன்-அமர் தேவூர்
                                                           அதன்மேல்,
பைங்கமலம் அங்கு அணி கொள் திண் புகலி ஞானசம்பந்தன்,
                                                             உரைசெய்
சங்கம் மலி செந்தமிழ்கள் பத்தும் இவை வல்லவர்கள், சங்கை
                                                                 இலரே.  11
உரை