தொடக்கம் |
76. திருவேதவனம் - திருவிராகம் - சாதாரி
|
|
|
3614. |
கல் பொலி சுரத்தின் எரி கானின் இடை
மாநடம் அது ஆடி,
மடவார்
இல் பலி கொளப் புகுதும் எந்தை பெருமானது இடம் என்பர்
புவிமேல்
மல் பொலி கலிக் கடல் மலைக்குவடு எனத் திரை கொழித்த
மணியை
வில் பொலி நுதல், கொடி இடை, கனிகைமார் கவரும்
வேதவனமே.
1 |
|
உரை
|
|
|
|
|
3615. |
பண்டு இரை பயப்புணரியில் கனகமால் வரையை
நட்டு,
அரவினைக்
கொண்டு கயிறின் கடைய, வந்த விடம் உண்ட குழகன் தன்
இடம்
ஆம்
வண்டு இரை நிழல் பொழிலின் மாதவியின் மீது அணவு
தென்றல் வெறி ஆர்
வெண் திரைகள் செம்பவளம் உந்து கடல் வந்த மொழி
வேதவனமே. 2 |
|
உரை
|
|
|
|
|
3616. |
கார் இயல் மெல் ஓதி நதிமாதை முடி வார்
சடையில் வைத்து,
மலையார்
நாரி ஒருபால் மகிழும் நம்பர் உறைவு என்பர் நெடுமாடம்
மறுகில்
தேர் இயல் விழாவின் ஒலி திண் பணிலம், ஒண் படகம்,
நாளும்
இசையால்,
வேரி மலி வார்குழல் நல் மாதர் இசை பாடல், ஒலி
வேதவனமே. 3 |
|
உரை
|
|
|
|
|
3617. |
நீறு திருமேனியின் மிசைத்து ஒளி பெறத்
தடவி, வந்து,
இடபமே
ஏறி, உலகங்கள் தொறும் பிச்சை நுகர் இச்சையர் இருந்த பதி
ஆம்
ஊறு பொருள் இன்தமிழ் இயல் கிளவி தேரும் மடமாதர் உடன்
ஆர்
வேறு திசை ஆடவர்கள் கூற, இசை தேரும் எழில்
வேதவனமே. 4 |
|
உரை
|
|
|
|
|
3618. |
கத்திரிகை, துத்திரி, கறங்கு துடி, தக்கையொடு,
இடக்கை,
படகம்,
எத்தனை உலப்பு இல் கருவித்திரள் அலம்ப, இமையோர்கள்
பரச,
ஒத்து அற மிதித்து, நடம் இட்ட ஒருவர்க்கு இடம் அது என்பர்
உலகில்
மெய்த் தகைய பத்தரொடு சித்தர்கள் மிடைந்து உகளும்
வேதவனமே. 5 |
|
உரை
|
|
|
|
|
3619. |
மாலை மதி, வாள் அரவு, கொன்றை மலர்
துன்று சடை நின்று
சுழல,
காலையில் எழுந்த கதிர் தாரகை மடங்க, அனல் ஆடும் அரன்
ஊர்
சோலையின் மரங்கள்தொறும் மிண்டி, இனவண்டு, மது உண்டு
இசைசெய;
வேலை ஒலிசங்கு, திரை, வங்க சுறவம், கொணரும்
வேதவனமே. 6 |
|
உரை
|
|
|
|
|
3620. |
வஞ்சக மனத்து அவுணர் வல் அரணம் அன்று
அவிய வார்
சிலை வளைத்து
அஞ்சு அகம் அவித்த அமரர்க்கு அமரன், ஆதி பெருமானது
இடம் ஆம்
கிஞ்சுக இதழ்க்கனிகள் ஊறிய செவ்வாயவர்கள் பாடல் பயில,
விஞ்சு அக இயக்கர் முனிவக்கணம் நிறைந்து மிடை
வேதவனமே.
7 |
|
உரை
|
|
|
|
|
3621. |
முடித் தலைகள் பத்து உடை முருட்டு உரு அரக்கனை
நெருக்கி விரலால்,
அடித்தலம் முன் வைத்து, அலமர, கருணை வைத்தவன் இடம்
பலதுயர்
கெடுத்தலை நினைத்து, அறம் இயற்றுதல் கிளர்ந்து, புலவாணர்
வறுமை
விடுத்தலை மதித்து, நிதி நல்குமவர் மல்கு பதிவேதவனமே. 8 |
|
உரை
|
|
|
|
|
3622. |
வாசமலர் மேவி உறைவானும் நெடுமாலும் அறியாத,
நெறியைக்
கூசுதல் செயாத அமண் ஆதரொடு தேரர் குறுகாத, அரன் ஊர்
காசு, மணி, வார் கனகம், நீடு கடல் ஓடு திரை வார் துவலை
மேல்
வீசு வலைவாணர் அவை வாரி, விலை பேசும் எழில்
வேதவனமே. 9 |
|
உரை
|
|
|
|
|
3623. |
மந்த முரவம் கடல் வளம் கெழுவு காழிபதி
மன்னு கவுணி,
வெந்த பொடி நீறு அணியும் வேதவனம் மேவு சிவன் இன்
அருளினால்,
சந்தம் இவை தண் தமிழின் இன் இசை எனப் பரவு பாடல்
உலகில்,
பந்தன் உரை கொண்டு மொழிவார்கள் பயில்வார்கள், உயர்
வான் உலகமே. 11 |
|
உரை
|
|
|
|