78. திருவேதிகுடி - திருவிராகம் - சாதாரி
 
3635. நீறு, வரி ஆடு அரவொடு, ஆமை, மனவு, என்பு, நிரை
                                              பூண்பர்; இடபம்,
ஏறுவர்; யாவரும் இறைஞ்சு கழல் ஆதியர்; இருந்த இடம் ஆம்
தாறு விரி பூகம் மலி வாழை விரை நாற, இணைவாளை
                                                              மடுவில்
வேறு பிரியாது விளையாட, வளம் ஆரும் வயல்
                                            வேதிகுடியே.          1
உரை
   
3636.

சொல் பிரிவு இலாத மறை பாடி நடம் ஆடுவர், தொல் ஆனை
                                                                உரிவை
மல் புரி புயத்து இனிது மேவுவர், எந்நாளும் வளர் வானவர்
                                                              தொழத்
துய்ப்பு அரிய நஞ்சம் அமுது ஆக முன் அயின்றவர், இயன்ற
                                                              தொகு சீர்
வெற்பு அரையன் மங்கை ஒரு பங்கர், நகர் என்பர் திரு
                                                  வேதிகுடியே.  
 2

உரை
   
3637. போழும் மதி, பூண் அரவு, கொன்றைமலர், துன்று சடை
                                                வென்றி புக மேல்
வாழும் நதி தாழும் அருளாளர்; இருள் ஆர் மிடறர்; மாதர்
                                                         இமையோர்
சூழும் இரவாளர்; திருமார்பில் விரி நூலர்; வரிதோலர்;
                                                     உடைமேல்
வேழ உரி போர்வையினர்; மேவு பதி என்பர் திரு
                                       வேதிகுடியே.       3
உரை
   
3638. காடர், கரி காலர், கனல் கையர், அனல் மெய்யர், உடல்
                                            செய்யர், செவியில்-
தோடர், தெரி கீளர், சரி கோவணவர், ஆவணவர் தொல்லை
                                                          நகர்தான்-
பாடல் உடையார்கள் அடியார்கள், மலரோடு புனல் கொண்டு
                                                          பணிவார்
வேடம் ஒளி ஆன பொடி பூசி, இசை மேவு திரு
                                            வேதிகுடியே.         4
உரை
   
3639. சொக்கர்; துணை மிக்க எயில் உக்கு அற முனிந்து, தொழும்
                                                          மூவர் மகிழத்
தக்க அருள் பக்கம் உற வைத்த அரனார்; இனிது தங்கும்
                                                           நகர்தான்-
கொக்கு அரவம் உற்ற பொழில் வெற்றி நிழல் பற்றி வரிவண்டு
                                                             இசை குலா,
மிக்கு அமரர் மெச்சி இனிது, அச்சம் இடர் போக நல்கு,
                                                வேதிகுடியே.    5
உரை
   
3640. செய்ய திரு மேனிமிசை வெண்பொடி அணிந்து, கருமான்
                                                    உரிவை போர்த்து
“ஐயம் இடும்!” என்று மடமங்கையொடு அகம் திரியும்
                                    அண்ணல் இடம் ஆம்
வையம் விலை மாறிடினும், ஏறு புகழ் மிக்கு இழிவு இலாத
                                                           வகையார்
வெய்ய மொழி தண் புலவருக்கு உரை செயாத அவர்,
                                                     வேதிகுடியே.      6
உரை
   
3641. உன்னி இருபோதும் அடி பேணும் அடியார் தம் இடர் ஒல்க
                                                               அருள
துன்னி ஒரு நால்வருடன் ஆல்நிழல் இருந்த துணைவன் தன்
                                                               இடம் ஆம்
கன்னியரொடு ஆடவர்கள் மா மணம் விரும்பி, அரு மங்கலம்
                                                                      மிக,
மின் இயலும் நுண் இடை நல் மங்கையர் இயற்று பதி
                                                     வேதிகுடியே.      7
உரை
   
3642. உரக் கரம் நெருப்பு எழ நெருக்கி வரை பற்றிய ஒருத்தன்
                                                          முடிதோள
அரக்கனை அடர்த்தவன், இசைக்கு இனிது நல்கி அருள்
                                                   அங்கணன், இடம்
முருக்கு இதழ் மடக்கொடி மடந்தையரும் ஆடவரும் மொய்த்த
                                                                கலவை
விரைக் குழல் மிகக் கமழ், விண் இசை உலாவு திரு
                                                    வேதிகுடியே.       8
உரை
   
3643. பூவின் மிசை அந்தணனொடு ஆழி பொலி அங்கையனும்
                                                     நேட, எரி ஆய்,
“தேவும் இவர் அல்லர், இனி யாவர்?” என, நின்று
                                  திகழ்கின்றவர் இடம்
பாவலர்கள் ஓசை இயல் கேள்வி அது அறாத கொடையாளர்
                                                            பயில்வு ஆம்,
மேவு அரிய செல்வம் நெடுமாடம் வளர் வீதி நிகழ்
                                                   வேதிகுடியே.        9
உரை
   
3644. வஞ்ச(அ)மணர், தேரர், மதிகேடர், தம் மனத்து அறிவு
                                              இலாதவர் மொழி
தஞ்சம் என என்றும் உணராத அடியார் கருது சைவன் இடம்
                                                                 ஆம்
அஞ்சுபுலன் வென்று, அறுவகைப் பொருள் தெரிந்து, எழு
                                               இசைக் கிளவியால்,
வெஞ்சினம் ஒழித்தவர்கள் மேவி நிகழ்கின்ற திரு
                                                  வேதிகுடியே.        10
உரை
   
3645. கந்தம் மலி தண்பொழில் நல் மாடம் மிடை காழி வளர்
                                              ஞானம் உணர் சம்-
பந்தன் மலி செந்தமிழின் மாலைகொடு, வேதிகுடி ஆதி கழலே
சிந்தை செய வல்லவர்கள், நல்லவர்கள் என்ன நிகழ்வு எய்தி,
                                                              இமையோா
அந்த உலகு எய்தி அரசு ஆளுமதுவே சரதம்; ஆணை
                                                            நமதே.   11
உரை