82. திருஅவள் இவள்நல்லூர் - திருவிராகம் - சாதாரி
 
3679. கொம்பு இரிய வண்டு உலவு கொன்றை, புரிநூலொடு குலாவி,
தம் பரிசினோடு சுடுநீறு தடவந்து, இடபம் ஏறி,
கம்பு அரிய செம்பொன் நெடுமாட மதில், கல்வரை வில் ஆக,
அம்பு எரிய எய்த பெருமான் உறைவது அவளிவணலூரே.  1
உரை
   
3680. ஓமையன, கள்ளியன, வாகையன, கூகை முரல் ஓசை,
ஈமம் எரி, சூழ் சுடலை வாசம்; முதுகாடு நடம் ஆடி;
தூய்மை உடை அக்கொடு அரவம் விரவி, மிக்கு ஒளி துளங்க,
ஆமையொடு பூணும் அடிகள்(ள்); உறைவது
                                அவளிவணலூரே.           2  
உரை
   
3681. நீறு உடைய மார்பில் இமவான் மகள் ஒர்பாகம் நிலைசெய்து
கூறு உடைய வேடமொடு கூடி, அழகு ஆயது ஒரு கோலம்
ஏறு உடையரேனும், இடுகாடு, இரவில் நின்று, நடம் ஆடும்
ஆறு உடைய வார்சடையினான் உறைவது அவளிவணலூரே. 3
உரை
   
3682. “பிணியும் இலர், கேடும் இலர், தோற்றம் இலர்” என்று உலகு
                                                              பேணிப்
பணியும் அடியார்களன பாவம் அற இன் அருள் பயந்து,
துணி உடைய தோலும், உடை கோவணமும், நாகம், உடல்
                                                             தொங்க
அணியும் அழகு ஆக உடையான் உறைவது
                                  அவளிவணலூரே.            4
உரை
   
3683. குழலின் வரிவண்டு முரல் மெல்லியன பொன்மலர்கள் கொண்டு
“கழலின் மிசை இண்டை புனைவார் கடவுள்” என்று அமரர்
                                                                   கூடித்
தொழலும் வழிபாடும் உடையார்; துயரும் நோயும் இலர் ஆவர்
அழலும் மழு ஏந்து கையினான்; உறைவது அவளிவணலூரே. 5
உரை
   
3684. துஞ்சல் இலராய் அமரர் நின்று தொழுது ஏத்த, அருள் செய்து
நஞ்சு மிடறு உண்டு, கரிது ஆய வெளிது ஆகி ஒரு நம்பன்;
மஞ்சு உற நிமிர்ந்து, உமை நடுங்க, அகலத்தொடு அளாவி,
அஞ்ச, மதவேழ உரியான்; உறைவது அவளிவணலூரே.    6
உரை
   
3685. கூடு அரவம் மொந்தை, குழல், யாழ், முழவினோடும் இசை
                                                              செய்ய,
பீடு அரவம் ஆகு படர் அம்பு செய்து, பேர் இடபமோடும்,
காடு அரவம் ஆகு கனல் கொண்டு, இரவில் நின்று, நடம்
                                                              ஆடி,
ஆடு அரவம் ஆர்த்த பெருமான் உறைவது
                                 அவளிவணலூரே.             7
உரை
   
3686. “ஒருவரையும் மேல் வலி கொடேன்” என எழுந்த விறலோன்,
                                                                     “இப்
பெருவரையின் மேல் ஒர் பெருமானும் உளனோ?” என
                                                    வெகுண்ட
கருவரையும் ஆழ்கடலும் அன்ன திறல் கைகள் உடையோனை,
அரு வரையில் ஊன்றி அடர்த்தான் உறைவது
                                    அவளிவணலூரே.          8
உரை
   
3687. பொறி வரிய நாகம் உயர் பொங்கு அணை அணைந்த
                                                    புகழோனும்,
வெறி வரிய வண்டு அறைய விண்ட மலர்மேல் விழுமியோனும்,
செறிவு அரிய தோற்றமொடு ஆற்றல் மிக நின்று, சிறிதேயும்
அறிவு அரியன் ஆய பெருமான் உறைவது அவளிவணலூரே.9
உரை
   
3688. கழி அருகு பள்ளி இடம் ஆக அடும் மீன்கள் கவர்வாரும்,
வழி அருகு சார வெயில் நின்று அடிசில் உள்கி வருவாரும்
பழி அருகினார் ஒழிக! பான்மையொடு நின்று தொழுது ஏத்தும்
அழி அருவி தோய்ந்த பெருமான் உறைவது
                                 அவளிவணலூரே.           10
உரை
   
3689. ஆன மொழி ஆன திறலோர் பரவும் அவளி வணலூர் மேல்,
போன மொழி நல் மொழிகள் ஆய புகழ் தோணிபுர ஊரன்-
ஞான மொழிமாலை பல நாடு புகழ் ஞானசம்பந்தன்-
தேன மொழிமாலை புகழ்வார், துயர்கள் தீயது இலர், தாமே. 11
உரை