தொடக்கம் |
85. திருவீழிமிழலை - திருவிராகம் - சாதாரி
|
|
|
3712. |
மட்டு ஒளி விரிதரு மலர் நிறை சுரிகுழல்
மடவரல்
பட்டு ஒளி மணி அல்குல் உமை அமை உரு ஒருபாகமா,
கட்டு ஒளிர் புனலொடு கடி அரவு உடன் உறை முடிமிசை
விட்டு ஒளி உதிர் பிதிர் மதியவர் பதி விழிமிழலையே. 1 |
|
உரை
|
|
|
|
|
3713. |
எண் நிற வரி வளை, நெறிகுழல், எழில்
மொழி, இளமுலைப்
பெண் உறும் உடலினர்; பெருகிய கடல்விடம் மிடறினர்;
கண் உறு நுதலினர்; கடியது ஒர் விடையினர்; கனலினர்
விண் உறு பிறை அணி சடையினர்; பதி விழிமிழலையே. 2 |
|
உரை
|
|
|
|
|
3714. |
மைத் தகு மதர் விழி மலைமகள் உரு ஒருபாகமா
வைத்தவர், மதகரி உரிவை செய்தவர், தமை மருவினார்
தெத்தென இசை முரல் சரிதையர், திகழ்தரும் அரவினர்
வித்தக நகுதலை உடையவர், இடம் விழிமிழலையே. 3 |
|
உரை
|
|
|
|
|
3715. |
செவ் அழல் என நனி பெருகிய உருவினர்,
செறிதரு
கவ்வு அழல் அரவினர்; கதிர் முதிர் மழுவினர்; தொழு இலா
முவ் அழல் நிசிசரர் விறல் அவை அழிதர, முது மதில்
வெவ் அழல் கொள, நனி முனிபவர்; பதி விழிமிழலையே. 4 |
|
உரை
|
|
|
|
|
3716. |
பைங்கணது ஒரு பெரு மழலை வெள் ஏற்றினர்;
பலி எனா
எங்கணும் உழிதர்வர்; இமையவர் தொழுது எழும் இயல்பினர்;
அங்கணர்; அமரர்கள் அடி இணை தொழுது எழ, ஆரமா
வெங் கண அரவினர்; உறைதரு பதி விழிமிழலையே. 5 |
|
உரை
|
|
|
|
|
3717. |
பொன் அன புரிதரு சடையினர், பொடி அணி
வடிவினர்
உன்னினர் வினை அவை களைதலை மருவிய ஒருவனார்
தென்னென இசை முரல் சரிதையர், திகழ்தரும் மார்பினில்
மின் என மிளிர்வது ஒர் அரவினர், பதி விழிமிழலையே. 6 |
|
உரை
|
|
|
|
|
3718. |
அக்கினொடு, அரவு, அரை அணி திகழ் ஒளியது
ஒர்
ஆமை, பூண்டு
இக்கு உக, மலி தலை கலன் என இடு பலி ஏகுவர்;
கொக்கரை, குழல், முழ, விழவொடும் இசைவது ஒர் சரிதையர்
மிக்கவர்; உறைவது விரை கமழ் பொழில் விழிமிழலையே. 7 |
|
உரை
|
|
|
|
|
3719. |
பாதம் ஒர்விரல் உற, மலை அடர் பலதலை
நெரிதர,
பூதமொடு அடியவர் புனை கழல் தொழுது எழு புகழினர்;
ஓதமொடு ஒலிதிரை படு கடல் விடம் உடை மிடறினர்
வேதமொடு உறு தொழில் மதியவர்; பதி விழிமிழலையே. 8 |
|
உரை
|
|
|
|
|
3720. |
நீர் அணி மலர் மிசை உறைபவன், நிறை
கடல் உறு துயில்
நாரணன், என இவர் இருவரும் நறுமலர் அடி முடி
ஓர் உணர்வினர் செலல் உறல் அரும் உருவினொடு ஒளி
திகழ்
வீர(அ)ணர் உறைவது வெறி கமழ் பொழில் விழிமிழலையே. 9 |
|
உரை
|
|
|
|
|
3721. |
இச்சையர், இனிது என இடு பலி; படுதலை மகிழ்வது
ஒர்
பிச்சையர்; பெருமையை இறைபொழுது அறிவு என உணர்வு
இலர்
மொச்சைய அமணரும், முடை படு துகிலரும், அழிவது ஒர்
விச்சையர்; உறைவது விரை கமழ் பொழில் விழிமிழலையே. 10 |
|
உரை
|
|
|
|
|
3722. |
உன்னிய அருமறை ஒலியினை முறை மிகு பாடல்செய்
இன் இசையவர் உறை எழில் திகழ் பொழில் விழிமிழலையை,
மன்னிய புகலியுள் ஞானசம்பந்தன வண்தமிழ்
சொன்னவர் துயர் இலர்; வியன் உலகு உறு கதி பெறுவரே. 11 |
|
உரை
|
|
|
|