தொடக்கம் |
94. திருவெங்குரு - திருமுக்கால் - சாதாரி
|
|
|
3810. |
விண்ணவர் தொழுது எழு வெங்குரு மேவிய
சுண்ண வெண்பொடி அணிவீரே;
சுண்ண வெண்பொடி அணிவீர்! உம தொழு கழல்
எண்ண வல்லார் இடர் இலரே. 1 |
|
உரை
|
|
|
|
|
3811. |
வேதியர் தொழுது எழு வெங்குரு மேவிய
ஆதிய அருமறையீரே;
ஆதிய அருமறையீர்! உமை அலர்கொடு
ஓதியர் உணர்வு உடையோரே. 2 |
|
உரை
|
|
|
|
|
3812. |
விளங்கு தண்பொழில் அணி வெங்குரு மேவிய
இளம்பிறை அணி சடையீரே;
இளம்பிறை அணி சடையீர்! உமது இணை அடி
உளம் கொள, உறு பிணி இலரே. 3 |
|
உரை
|
|
|
|
|
3813. |
விண்டு அலர் பொழில் அணி வெங்குரு மேவிய
வண்டு அமர் வளர் சடையீரே;
வண்டு அமர் வளர் சடையீர்! உமை வாழ்த்தும் அத்
தொண்டர்கள் துயர், பிணி, இலரே. 4 |
|
உரை
|
|
|
|
|
3814. |
மிக்கவர் தொழுது எழு வெங்குரு மேவிய
அக்கினொடு அரவு அசைத்தீரே;
அக்கினொடு அரவு அசைத்தீர்! உமது அடி இணை
தக்கவர் உறுவது தவமே. 5 |
|
உரை
|
|
|
|
|
3815. |
வெந்த வெண்பொடி அணி வெங்குரு மேவிய
அந்தம் இல் பெருமையினீரே;
அந்தம் இல் பெருமையினீர்! உமை அலர்கொடு
சிந்தை செய்வோர் வினை சிதைவே. 6 |
|
உரை
|
|
|
|
|
3816. |
விழ மல்கு பொழில் அணி வெங்குரு மேவிய
அழல் மல்கும் அங்கையினீரே;
அழல் மல்கும் அங்கையினீர்! உமை அலர்கொடு
தொழ, அல்லல் கெடுவது துணிவே. 7 |
|
உரை
|
|
|
|
|
3817. |
வித்தக மறையவர் வெங்குரு மேவிய
மத்த நல் மலர் புனைவீரே;
மத்த நல் மலர் புனைவீர்! உமது அடி தொழும்
சித்தம் அது உடையவர் திருவே! 8 |
|
உரை
|
|
|
|
|
3818. |
மேலவர் தொழுது எழு வெங்குரு மேவிய
ஆல நல் மணிமிடற்றீரே;
ஆல நல் மணிமிடற்றீர்! உமது அடி தொழும்
சீலம் அது உடையவர் திருவே! 9 |
|
உரை
|
|
|
|
|
3819. |
விரை மல்கு பொழில் அணி வெங்குரு மேவிய
அரை மல்கு புலி அதளீரே;
அரை மல்கு புலி அதளீர்! உமது அடி இணை
உரை மல்கு புகழவர் உயர்வே! 10 |
|
உரை
|
|
|
|