தொடக்கம் |
98. திருவீழிமிழலை - திருமுக்கால் - சாதாரி
|
|
|
3853. |
வெண்மதி தவழ் மதில் மிழலை உளீர், சடை
ஒண்மதி அணி உடையீரே;
ஒண்மதி அணி உடையீர்! உமை உணர்பவர்
கண் மதி மிகுவது கடனே. 1 |
|
உரை
|
|
|
|
|
3854. |
விதி வழி மறையவர் மிழலை உளீர், நடம்
சதி வழி வருவது ஒர் சதிரே;
சதி வழி வருவது ஒர் சதிர் உடையீர்! உமை
அதிகுணர் புகழ்வதும் அழகே. 2 |
|
உரை
|
|
|
|
|
3855. |
விரை மலி பொழில் அணி மிழலை உளீர்,
ஒரு
வரைமிசை உறைவதும் வலதே;
வரைமிசை உறைவது ஒர் வலது உடையீர்! உமை
உரை செயுமவை மறை ஒலியே. 3 |
|
உரை
|
|
|
|
|
3856. |
விட்டு எழில் பெறு புகழ் மிழலை உளீர்,
கையில்
இட்டு எழில் பெறுகிறது எரியே;
இட்டு எழில் பெறுகிறது எரி உடையீர்! புரம்
அட்டது வரை சிலையாலே. 4 |
|
உரை
|
|
|
|
|
3857. |
வேல் நிகர் கண்ணியர் மிழலை உளீர்,
நல
பால் நிகர் உரு உடையீரே;
பால் நிகர் உரு உடையீர்! உமது உடன் உமை
தான் மிக உறைவது தவமே. 5 |
|
உரை
|
|
|
|
|
3858. |
விரை மலி பொழில் அணி மிழலை உளீர்,
செனி
நிரை உற அணிவது நெறியே;
நிரை உற அணிவது ஒர் நெறி உடையீர்! உமது
அரை உற அணிவன, அரவே. 6 |
|
உரை
|
|
|
|
|
3859. |
விசை உறு புனல் வயல் மிழலை உளீர், அரவு
அசைவு உற அணிவு உடையீரே;
அசைவு உற அணிவு உடையீர்! உமை அறிபவர்
நசை உறும் நாவினர் தாமே. 7 |
|
உரை
|
|
|
|
|
3860. |
விலங்கல் ஒண்மதில் அணி மிழலை உளீர்,
அன்று
இலங்கை மன் இடர் கெடுத்தீரே;
இலங்கை மன் இடர் கெடுத்தீர்! உமை ஏத்துவார்
புலன்களை முனிவது பொரு 8 |
|
உரை
|
|
|
|
|
3861. |
வெற்பு அமர் பொழில் அணி மிழலை உளீர்,
உமை
அற்புதன் அயன் அறியானே;
அற்புதன் அயன் அறியா வகை நின்றவன்
நல் பதம் அறிவது நயமே. 9 |
|
உரை
|
|
|
|
|
3862. |
வித்தக மறையவர் மிழலை உளீர், அன்று
புத்தரொடு அமண் அழித்தீரே;
புத்தரொடு அமண் அழித்தீர்! உமைப் போற்றுவார்
பத்தி செய் மனம் உடையவரே. 10 |
|
உரை
|
|
|
|
|
3863. |
விண் பயில் பொழில் அணி மிழலையுள் ஈசனை,
சண்பையுள் ஞானசம்பந்தன்
சண்பையுள் ஞானசம்பந்தன தமிழ் இவை,
ஒண் பொருள் உணர்வதும் உணர்வே. 11 |
|
உரை
|
|
|
|